பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 நிதி நெருக்கடி நிலை பிரிவு 360.-இந்தியாவின் நிதி நிலை உறுதிக்கு அல்லது நாணயத்திற்கு அபாயம் ஏற்படும் நேர்வுகளில், நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு நீக்கப்பட வேண்டும். அரசுப் பணிகள். இரண்டு வகைப் பணிகள் மட்டுமே இருக்கவேண்டும்- (1) மைய அரசுப் பணிகள். (2) மாநில அரசுப் பணிகள். பணிகள் உட்பட தற்போதுள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அனைத்து இந்தியப் பணிகள் மைய அரசுப் பணிகளுடனோ மாநில அரசுப் பணிகளுடனோ இணைக்கப்பட வேண்டும். மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வு, பணி நிபந்தனைகள் ஆகியவை மாநிலங்களால் தொடர்ந்து முறைப்படுத்தப்பட வேண்டும். கூட்டாட்சி அரசுப் பணிகளுக்கான தேர்வு தற் போதுள்ள நடைமுறையையொட்டி இருக்கும். அத்தகைய தேர்வு ஒவ்வொரு மாநிலத்திலும் அரிசனங்கள், பழங்குடி மக்கள், பின் தங்கிய வகுப்பினர் ஆகியோரின் எண்ணிக்கையை ஒட்டி அவர் களுக்குப் பதவிகள் ஒதுக்குவதற்கான ஏற்பாட்டுடன் மாநில வாரியான அடிப்படையில் செய்யப்பட வேண்டும். கூட்டாட்சி அரசுக்கும் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கும் இடையே ஒப்புக்கொள்ளக்கூடிய வரையறைகள் - நிபந்தனைகளின் படி, மாநில அரசுப் பணியாளர்களையும், கூட்டாட்சி அரசுப் பணி யாளர்களையும் பரஸ்பரம் மாற்றிக் கொள்ள வழிவகை இருத்தல் வேண்டும். பிரிவு 312.- அனைத்திந்தியப் பணிகள், புதிய அனைத்திந்தியப் பணியை உருவாக்குதல் ஆகியவை தொடர்பான இந்தப் பிரிவு நீக்கப்படவேண்டும். மைய அரசுப் பணியாளர்களின் ஊதியங்கள். மைய, மாநில அரசுப்பணியாளர்களின் ஊதியங்கள், உள்ளூர் அல்லது தனி நிலைகளுக்குரிய சலுகைகள் அளிக்கப்பட்டு, நாடு முழுவதும் ஒருபடித்தாக அமைய வேண்டும்.