பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 மக்கள் அவை 1951-ல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அறுதியிடப்பட்ட இடங் களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்.. தாலன்றி, மற்றபடி மாற்றம் செய்யப்படாமல், இருந்தவாறே. இருக்க வேண்டும். மக்கள் தொகை அதிகரித்திருந்தால், அதிக அளவு எண்ணிக்கை ஒன்றிற்குட்பட்டு, இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் ஆயினும், 1951-ல் ஒவ்வொரு மாநிலத் திற்கும் அறுதியிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை எந்நிலையி லும் குறைக்கப்படக்கூடாது. மொழி. மைய அரசின் ஆட்சி மொழி, அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது விவரப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள அனைத்து மொழி களாகவும் இருக்க வேண்டும். இந்நிலையினை எய்தும் வரை, மைய அரசு தலைமைச் செயலகம் உட்பட மைய அரசுத் துறைகளனைத் திலும், மைய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே தொடர்பு கொள்ளவும் ஆங்கில மே தொடர்ந்து ஆட்சி மொழியாக. இருக்க வேண்டும். உச்ச நீதி மன்றத்தில் ஆங்கிலமே தொடர்ந்து பயன்படுத்தப்படவேண்டும். உயர் நீதிமன்றம் உட்பட நீதிமன் றங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் ஆட்சி மொழியை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யவேண்டும். மாநிலத்தில் உள்ள மைய அரசின் அலுவலகங்கள் பொதுமக்களுடன் அலுவல் தொடர்பு கொள்வதற்கு ஆங்கிலத்துடன் அந்தந்த மாநிலத்தின் ஆட்சி மொழியையும் பயன்படுத்த வேண்டும். மாநிலத்தில் அமைந்துள்ள மையஅரசின் அலுவலகங்களால் மாநில அரசோடும். அதன் அலுவலகங்களோடும் மேற்கொள்ளப்படும் தகவல் தொடர்புகள், அந்த மாநிலத்தின் ஆட்சி மொழி வாயிலாகவே நடைபெறல் வேண்டும். மாநிலத்தில் பணிபுரியும் மைய அரசுப் பணியாளர்கள் அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியை நன்கு அறிந்திருத்தல் வேண்டும். வர்த்தகமும் வாணிபமும். பிரிவு 302 - மாநிலங்களுக்கிடையே வர்த்தகத்தின் மீதும். வாணிபத்தின்மீதும் பிறதொடர்புகள்மீதும் தடைகள் விதிக்க நாடாளு மன்றத்திற்கு இப்பிரிவு அதிகாரம் அளிக்கிறது. இது. நீக்கப்பட வேண்டும்.