பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

27 பிரிவு 304(பி)-மாநிலச் சட்டமன்றம் இயற்றும் சட்டவரைவு களுக்கு குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று கோரும் 304 (பி) பிரிவின் நிபந்தனை நீக்கப்பட வேண்டும். பொது ஒழுங்கமைதி. மாநில அரசு கேட்டுக்கொள்வதன் பேரிலோ அதன் இசை வின் பேரிலோ அன்றி, மற்றப்படி எந்த ஒரு மாநிலத்திற்கும் மத்திய ரிசர்வ் காவல் படை அனுப்பப்படக் கூடாது. மாநிலச் சட்டமன்றத்தின் தேர்தல்களை நடத்துவதற்கான பணியாளர் அமைப்பு. 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகிய இருசட்டங்களின் பிரிவுகளும், அவற்றின்கீழ் இயற்றப்பட்ட விதிகளும் நாடாளு மன்றத் தேர்தல்களுக்குப் பொருந்துகின்ற வகையில் திருத்தப்பட வேண்டும். மாநிலச் சட்ட மன்றங்களின் தேர்தல் குறித்து, மாநிலச் சட்டமன்றங்கள் சட்டங்கள் இயற்ற முழுஉரிமை பெற்ற வையாக இருக்கவேண்டும். மாநிலங்களுக்கிடையே ஏற்படும் நீர்பற்றிய தகராறுகள். பல மாநிலங்களிடையே ஓடும் ஓர் ஆறு குறித்து நீர் பற்றிய தகராறு எழு மாயின், சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகளுக்கிடையே பேச்சு வார்த் தைகள் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு கலந்து பேசப்படும் போது, குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்பந்தங்கள் ஏதும் ஏற்படா விடில், குறித்த காலவரைக்குள் பிரதமரால் அப்பிரச்னை தீர்த்து. உடன்படிக்கை வைக்கப்பட வேண்டும். ஏதும் செய்யப்படா விடில், குறிப்பிட்ட காலத்திற்குள் மைய அரசே இத் தகராறை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இத் தகராறு குறித்த வழக்கினை மைய அரசு கவனிக்கத் தவறினால் தகராறுக்குரிய தரப் பினர் எவரேனும் அவ் வழக்கினை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்ப லாம். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் வழக்கு உச்ச நீதிமன்ற அனைத்து நீதிபதிகளும் கொண்ட ஆயத்தால் விசாரிக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைச் செயல்படுத்து வதற்கு வேண்டும் வகையில் விதிகள் இயற்றப்படவேண்டும்.