பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

29 சட்டமியற்றும் அதிகாரம். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 7-வது இணைப்பில் மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் என்ற தலைப்பு களின் கீழ் நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவற் றின் சட்டமியற்றும் அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. இராஜ மன்னார் குழுவின் பரிந்துரைகளைக் கவனத்திற்கொண்டு, நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை, மாநிலங்களுக்கிடையே போக்குவரத்துத் தொடர்புகள், நாணயச் செலாவணி ஆகியவை களைக் குறித்த அதிகாரங்கள் மாத்திரம் கூட்டாட்சி அரசுக்கு ஒதுக்கப்பட்டு, எஞ்சிய அதிகாரங்கள் உட்பட, மற்ற எல்லா அதிகாரங்களும் மாநிலங்களுக்கு மட்டுமே இருக்கும் வகையில் உண்மையான கூட்டாட்சி அரசை நிறுவும் நோக்குடன் மேற் சொன்ன அதிகார விவரப் பட்டியலை ஆய்ந்து, அவற்றைக் கூட்டாட்சிப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் என்ற தலைப்புகளின்கீழ் வகுத்துத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன கூட்டாட்சிப் பட்டியல் சட்டமியற்றும் அதிகாரங்கள் சம்பந்தமாக மைய அரசுப் பட்டியல் பின்வரும் பதிவுகள் கூட்டாட்சிப் பட்டியலில் அப் படியே வைத்துக்கொள்ளப்படவேண்டும். பாதுகாப்புக்குப் படை திரட்டுவது உட்பட இந்தியப் பாது காப்பும், அது சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பணியும், போர்க்காலங் களில் உசிதமாய் இருக்கக்கூடிய எல்லா வகையான நடவடிக்கை சளும், அவை தொடரப்படுவதும், போர்க்காலம் முடிந்ததும் ராணுவத்தைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளும்; மைய அரசின் கப்பற்படை, ராணுவப்படை, படைகள், அதைச் சேர்ந்த ஆயுதப்படை; விமானப் பாளையப் பகுதிகளை வரையறுத்தல், அந்தப் பகுதிகளில் உள்ளாட்சி, அந்தப் பாளையப் பகுதிகளுக்குள் அதிகார மன்றங்கள் அமைப்பும் அதன் அதிகாரங்களும், அத்தப் பகுதிகளில் வாடகைக் கட்டுப்பாடு உட்பட வீட்டு வசதியை முறைப்படுத்துதல். கப்பற்படை, ராணுவப்படை, விமானப் படைப் பணிகள்; ஆயுதங்கள், சுடு படைக்கலன்கள், துப்பாக்கி மருந்துகள், வெடி மருந்துகள்;