பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 நாணயம், நாணயம் அச்சிடுதல், சட்டப்படி செலாவணி' யாகும் நாணயங்கள், அன்னியச் செலாவணி; அன்னியக் கடன்கள்; மைய ரிசர்வ் முறையில் அமைந்த ரிசர்வ் வங்கி; அயல் நாடுகளுடன் வர்த்தகம், வாணிகம்; சுங்க எல்லைகளுக்கு. அப்பால் இறக்குமதியும் ஏற்றுமதியும்; சுங்க எல்லைகளின் பொருள் விளக்கம்; இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவிருக்கும் பொருள் களின் தர வரையறைகளைக் குறிப்பிடுதல்; ஆட்சிப் பகுதியிலுள்ள கடலுக்கு அப்பால் மீன் பிடித்தலும் மீன் வளமும்; மைய அரசுப் பணியாளர்கள் தொடர்பான தொழில் தகராறுகள்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கக் காலத்தில் இருந்த தேசிய நூலகம், இந்திய அரும்பொருள் காட்சிசாலை, இம்பீரியல் போர் அரும்பொருள் காட்சிசாலை, விக்டோரியா நினைவுச் சின்னம், இந்திய போர் நினைவுச் சின்னம் போன்ற அமைப்புகள்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்த காசி இந்து பல்கலைக் சழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், டில்லி பல்கலைக் கழகம் போன்ற நிறுவனங்கள்; மக்கள் தொகைக் கணக்கெடுப்பு; மைய அரசுப் பணிகளும் மைய அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழுவும்; மைய அரசு ஓய்வூதியங்கள், அதாவது, இந்திய அரசால் அல்லது இந்தியத் தொகுதி நிதியிலிருந்து வழங்கப்படத் தக்க. ஓய்வூதியங்கள்; நாடாளுமன்றத்திற்கும், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் பதவிகளுக்கும் நடைபெறும் தேர்தல்கள்; அத்தகைய தேர்தல்கள் தொடர்பான தேர்தல் ஆணைக் குழு: