பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

35 வாரியங்கள், சுரங்க ஏற்பாட்டு அதிகார மன்றங்கள், சுயேச்சை யான உள்ளாட்சி அல்லது கிராம நிர்வாகத்திற்கான ஏனைய உள் ளாட்சி மன்றங்கள்; பொதுச் சுகாதாரமும் துப்புரவும்; மருத்துவ மனைகளும் மருந்தகங்களும்; இந்தியாவிற்கு வெளியேயுள்ள இடங்கள் நீங்கலாக பிற இடங்களுக்கு யாத்திரைகள் செய்தல். போதையூட்டும் மதுவகைகள், அதாவது, போதையூட்டும் மதுவகைகளை உற்பத்தி செய்தல், தயார் செய்தல், வைத்திருத்தல், போக்குவரத்து செய்தல்,வாங்குதல், விற்பனை செய்தல். உடல் ஏலாமையுற்றவர்களுக்கும் வேலையில் அமர்த்தப்பட இயலாதவர்களுக்கும் நிவாரணம் அளித்தல். புதைத்தலும் இடுகாடுகளும்; எரியூட்டலும் சுடுகாடுகளும். பல்கலைக் கழகங்கள் உட்பட, கல்வி. மாநில அரசு கட்டுபாட்டின் கீழுள்ள அல்லது மாநில அரசின் செலவில் நடைபெறும் நூலகங்கள், அரும்பொருட் காட்சி சாலைகள் அவைபோன்ற பிற நிறுவனங்கள்; பண்டைய சரித்திரப் புகழ் வாய்ந்த நினைவுச் சின்னங்கள், பதிவேடுகள். போக்குவரத்து அதாவது சாலைகள், பாலங்கள், ஓடத் துறைகள் ஏனைய போக்குவரத்துகள், நகராட்சி டிராம் வண்டிப் பாதை, சாலைகள், உள்நாட்டு நீர் வழிகள், கப்பற்பாதை, இயந்திர சக்தியினால் இயக்கப்படும் வண்டிகள் நீங்கலாக ஏனைய வண்டிகள். வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி, பூச்சித் தடுப்பு, பயிர் நோய்த்தடுப்பு உட்பட வேளாண்மை. கால்நடைகளைப் பேணுதல், பாதுகாத்தல், மேம்படுத்துதல், கால்நடை நோய்த் தடுப்பு, கால்நடை மருத்துவப் பயிற்சி, வைத்தியம். கால்நடை அடைப்பு கொட்டகைகள், கால்நடைகள் அத்து மீறுவதைத் தடைபடுத்துதல்.