பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 தண்ணீர், அதாவது தண்ணீர் வழங்கல், கால்வாய்களும், வடி கால்களும், கரைகளும், நீர்த்தேக்கங்களும், நீர் சக்தியும். நிலம், அதாவது நிலத்திலோ அல்லது நிலத்தின் மீதோ, உள்ள உரிமைகள், நிலச்சுவான் தாருக்கும் குடியானவருக்கும் உள்ள தொடர்பு உட்பட நில உரிமை முறைகளும் குத்தகை வசூலும்; வேளாண்மை நிலத்தை மாற்றுதலும் பராதீனம் செய்தலும்; நில மேம்பாடும் வேளாண்மைக் கடன்களும் குடியேற்றம். காடுகள். வனவிலங்குகளையும் பறவைகளையும் பாதுகாத்தல். மீனளங்கள். 1-வது பட்டியலில் கண்ட விதித்துறைகளுக்குட்பட்டு கோர்ட் ஆஃப் வார்டுகள், வில்லங்கத்திற்குட்பட்டவைகளும் ஜப்தி செய்யப் பட்டவைகளுமான எஸ்டேட்டுகள்; சுரங்கங்களை முறைப்படுத்துதலும் கனிப் பொருள்களை மேம் பாடு செய்தலும். 1-வது பட்டியலில் கண்ட தொழில்கள். விதித்துறைகளுக்குட்பட்ட எரிவாயு, எரிவாயு உற்பத்தித் தொழிற்சாலைகள், மாநிலத் திற்குள் வியாபாரமும் வாணிகமும், பண்டங்களின் உற்பத்தி, வழங்கல், வினியோகம், அங்காடிகளும் சந்தைகளும். எடைகளும் அளவைகளும்-தர நிர்ணயம் நீங்கலாக. லேவாதேவித் தொழிலும் கடன் கொடுப்பவர்களும்; விவசாயிகளின் கடன் நிவாரணம். விடுதிகளும் விடுதிக்காரர்களும். கழகங்களையும்,பல்கலைக் கழகங்களையும் சட்டப்படி இணைத் தலும் முறைப்படுத்தலும், கலைத்தலும், சட்டப்படி இணைக்கப் பட்டிராத வியாபார, இலக்கிய, விஞ்ஞான, சமய சங்கங் களும், கழகங்களும்; கூட்டுறவுச் சங்கங்கள். அரங்குகளும், நாடக நிகழ்ச்சிகளும்; திரைப்படங்கள், விளை யாட்டுகள், வேடிக்கைகள், கேளிக்கைகள்.