பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 மாநிலத்தில் தயாரிக்கப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும் பின்வரும் பண்டங்கள்மீது ஆயத் தீர்வைகளும், இந்தியாவில் வேறெங்கணும் தயாரிக்கப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும் அதேமாதிரியான பண்டங்களின் மீது அதே வீதங்களின் படியோ அல்லது குறைந்த வீதங்களின் படியோ எதிர்த் தீர்வைகள்- (அ) மனிதர்கள் உட்கொள்ளும் மது பானங்கள்.. (ஆ) அபினும், இந்திய சணலும், போதை உண்டாக்கும் பிற மருந்துச் சரக்குகளும், போதை பொருள்களும் உள்ளூர்ப் பகுதிக்குள் செலவழிப்பதற்கோ பயன்படுத்து வதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ பொருள்களைக் கொண்டு வருவதன்மீது வரிகள், மின்சாரப் பயன் வரி அல்லது மின்சார விற்பனை வரிகள். செய்தித் தாள்கள் நீங்கலாக ஏனைய பொருள்களின் விற்பனை அல்லது வாங்கு தல் மீது வரிகள், விளம்பரங்கள் மீது வரிகள், சாலை அல்லது உள்நாட்டு நீர் வழிகள் மூலமாக ஏற்றிச் செல்லப் படும் பொருள்கள் மீதும் பயணிகள் மீதும் வரிகள். சாலைகளில் பயன்படுத்தத்தக்க வண்டிகளின் மீது-டிராம் வண்டிகள் உட்பட விசையினால் இயக்கப்பட்டாலும் இயக்கப் படாவிட்டாலும்-வரிகள். விலங்குகளின் மீதும் படகுகளின் மீதும் வரிகள். சுங்க வரிகள், தொழில்கள், வாணிபங்கள், அலுவல்கள், வேலைகள் இவை களின் மீது வரிகள். தலைகட்டு வரிகள். ஆடம்பரப் பொருள்களுக்கு வரிகள், வேடிக்கைகள் கேளிக் கைகள், பந்தயம் கட்டுதல், சூதாட்டம் இவைகளின் மீது விதிக்கப் படும் வரிகள் உட்பட ஆவணங்கள் குறித்து முத்திரைத் தாள் தீர்வை வீதங்கள். இப்பட்டியலில் உள்ள பொருள்களில் எதுபற்றியேனும் செய்த சட்டங்களுக்கு விரோதமான குற்றங்கள்.