பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

41 பண்டைய நினைவுச் சின்னங்கள், வரலாற்றுச் சின்னங்கள், ஆவணங்கள், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் சிதைவுகளும். மாநிலச் சட்ட மன்றங்களுக்கு நடைபெறும் தேர்தல்கள், இத்தகைய தேர்தல்கள் குறித்த தேர்தல் ஆணைக்குழு. மாநிலக் கணக்குசளின் தணிக்கை. (உயர்நீதி மன்றத்தின் விடுமுறை நாட்கள் உட்பட) உயர் ஸ்நீதி மன்றத்தின் அமைப்பும் ஒழுங்கும்; உயர்நீதி மன்றத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் குறித்த விதித்துறை, உயர்நீதி மன்றத்தின் முன் வழக்குரைஞர் தொழில் நடத்த உரிமை பெற்ற வர்கள். வருமான வரி. சாராயம் அல்லது பிற பொருள் அடங்கிய மருந்து ஒப்பனைப் பொருள்கள் உட்பட, புகையிலை, ஏனைய பொருள்களின் மீது ஆயத்தீர்வை, கார்ப்பரேஷன் வரி. தனியார், கம்பெனிகள் ஆகியோரின் இருப்புகளின் மூலதன மதிப்பின் மீது விதிக்கப்படும் வரிகள்; கம்பெனிகளின் மூலதனத் தின் மீது விதிக்கப்படும் வரிகள். சொத்துக்களின் மீதான மரண வரி. சொத்து வாரிசுரிமை சம்பந்தமான வரிகள். ரயில், கப்பல் அல்லது விமானம் மூலமாக ஏற்றிச் செல்லப் யடும் பண்டங்கள், பயணிகள் மீது இறுதிமுனை வரி (Terminal Tax) மாநிலத்திற்குள் ரயில்வே கட்டணங்கள், சரக்குக் கட்டணங்கள் மீது வரி. பங்கு மாற்று நிலையங்கள், வாய்தா மார்க்கெட்டுகள் இவற் றின் விவகாரங்களின்மீது முத்திரைத்தாள் தீர்வை நீங்கலாகப் பிற வரிகள். மாற்று உண்டியல்கள், காசோலைகள், கடன் உறுதிச் சீட்டு கள், கப்பல் சரக்குப்பட்டிகள், அனுமதிச் சீட்டுகள், பண