பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 இன்சூரன்ஸ் பாலிசிகள், பங்குகள் மாற்றம், கடன் ஈட்டுறுதி ஆவணங்கள், பிரதிநிதிச் சீட்டுகள், ரசீதுகள் இவைபற்றிய முத்தி ரைத்தாள் தீர்வை வீதங்கள். செய்திப் பத்திரிகைகள் விற்றல் அல்லது வாங்குதல் மீதும் அவற்றில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மீதும் விதிக்கப்படும். வரிகள். செய்தித் தாள்கள் நீங்கலாகப் பிற பண்டங்களை விற்றல் அல்லது வாங்குதல் மீது விதிக்கப்படும் வரிகள். I,III,பட்டியல்களில் குறிப்பிடப்படாத வரிகள் உட்பட எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும். (3) கூட்டுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் சட்டமியற்றும் அதிகாரங்கள். பொதுப் பட்டியலில் சட்டமியற்றும் அதிகாரங்கள் சம்பந்த. மான பின்வரும் பதிவுகள் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட் டுள்ளன. குற்றவியல் சட்டம், இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் தொடக்கத்தில் இந்திய குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தும் உட்பட-ஆனால், மையஅரசுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள பொருள்கள் குறித்த சட்டங்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் நீங்கலாக; சிவில் அதிகாரத்திற்குத். துணையாக மைய அரசின் கடற்படைகள், ராணுவப் படைகள் அல்லது விமானப் படைகள் அல்லது வேறு எந்த ஆயுதம் படைகளையாவது பயன்படுத்துதல் நீங்கலாக. குற்றவியல் வழக்கு முறை-இந்த அரசியலமைப்புச் சட்டத். தின் தொடக்கத்தில் குற்றவியல் வழக்குமுறைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த பொருள்கள் அனைத்தும் உட்பட. நாட்டின் பாதுகாப்பு, பொது அமைதியைப் பாதுகாத்தல் அல்லது சமுதாயத்திற்கு இன்றியமையாத பொருள்கள் வழங்கு தலையும் பணிகளையும் பாதுகாத்தல், இவைபற்றிய காரியங்களுக்க காக தடைப் பாதுகாவல்; அத்தகைய பாதுகாவலுக்கு உட்பட்ட வர்கள்.