பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

!! இந்தியாவிலுள்ள அனைத்து மாநில முதல்வர்கள், அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள், எல்லா மாநில சட்டமன்ற (பேரவை - மேலவை) கட்சித் தலைவர்கள், நிதிக்குழுக்களின் தலைவர்கள், திட்டக்குழு தலைவர், திட்டக்குழுத் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில உயர்நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகள், எல்லா மாநிலங்களின் அட்வொகேட் ஜெனரல்கள், சுட்ரீம் கார்ட் நீதிபதிகள் மத்திய - மாநில சர்வீஸ் கமிஷன் தலைவர்கள் தலைமைத் தேர்தல் கமிஷனர், விடுதலைப் போராட் டத்தில் பங்குகொண்ட முக்கியத் தலைவர்கள், தொழிலதிபர்கள், பொருளாதார வல்லுநர்கள், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் - வார இதழ்களின் ஆசிரியர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ராஜமன்னார் குழு விவரங் கோரி கருத்துரைகேட்டது. இவைகளின் அடிப்படையில் இராஜமன்னார் குழு தனது அறிக்கையை 1971 மே திங்களில் தமிழக முதல்வர் கலைஞர் அவர் களிடம் அளித்தது. அறிக்கையையும், அந்த அறிக்கையின் பேரில் சழக அரசின் கருத்தையும் இணைத்து 1974 ஏப்ரல் 16 அன்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் கலைஞர் அவர்கள் தீர்மானததை முன் மொழிந்து விவாதத்திற்கு வைத்தார். அறிக்கையின்மீது சட்டப் பேரவையில் 5 நாட்கள் விரிவான விவாதம் நடைபெற்று, 1974 ஏப்ரல் 20 அன்று நிறைவேற்றப் டட்டது. 1974 ஏப்ரல் மாதத்தில் கழக அரசால் நிறைவேற்றிய மத்திய அரசின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட மாநில சுயாட்சி பற்றிய தீர்மானம்தான், இன்று பீறிட்டுக் கிளம்பியுள்ள மத்திய மாநில உறவு குறித்த பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல்வோருக்கு அருந்துணையாக உதவும் பெருமை பெற்றுள்ளது. இத்தகு பெருமைக்குரிய தீர்மானத்தையும், அதுகுறித்து அப்போதைய கழக அரசின் முதல்வர் கலைஞர் அவர்களின் கருத் துக்களையும் இந்நூல் வடிவில் தமிழக மக்கள்முன் வைப்பதில் தலைமைக் கழகம் பெருமையடைகிறது.