பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 92 மங்கம்மாள் இறந்து இருபத்தாறு ஆண்டுகள் கழித்து நாயக்கர் ஆட்சியை ஏற்றவள் இராணி மீனாட்சி. இவளே நாயக்க வமிசத்தின் கடைசி எரிநட்சத்திரம். மங்கம்மாள் ஆட்சிக்கும் இராணி மீனாட்சியின் ஆட்சிக்கும் இடையே நடைபெற்ற நிகழ்ச்சிகள் சிலவற்றையும் கவனிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். 1643ல் படையெடுத்து வந்த ஒளரங்கசீபுவின் தளபதி, தஞ்சையையும் மதுரையையும் தன் படைவன்மைக்குப் பணிய வைத்து, மொகலாய அரசுக்குக் கப்பமும் கட்டச் செய்தான். டில்லியிலிருந்து நாட்டின் நிருவாகத்தைக் கவனித்து வந்த அவன், தென்னிந்திய நிருவாகத்தைக் கவனிக்க இருவரை நியமித்தான். அவர்களுள் ஒருவன் ஐதராபாது நைசாம். நைசாமே தென்னிந்தியாவிற்கும் தக்காணத்திற்கும் மொகலாய சக்கரவர்த்தியின் நேர்ப்பிரதிநிதி. அவன் அதிகாரத்திற்கு உட்பட்டுக் கர்நாடகத்தை - தமிழகத்தை - கவனித்துக் கொள்ள வேண்டியவனே ஆர்க்காட்டு நவாபு, சட்டப்படியும் சம்பிரதாயப்படியுமே இந்த ஏற்பாட்டைச் செய்தான் மொகலாய சக்கரவர்த்தி. என்றாலும், நடைமுறையில் ஐதராபாது நைசாமும் ஆர்க்காட்டு நவாபுவும் தத்தம் பகுதிகளில் சுதந்தர ஆட்சியே நடத்தினர். ஒளரங்கசீபுவிற்குப்பின், மொகலாயப் பேரரசு சீர்குலைந்து போயிற்று. அதனால், நைசாம், தட்டிக் கேட்க ஆளில்லாமல், தனி ஆட்சி நடத்தினான். ஆர்க்காட்டு நவாபுவும் நைசாமுக்கு இணையாகக் கூத்தாடினான். என்றாலும், ஒவ்வொரு சமயத்தில் நைசாம் ஆர்க்காட்டு ஆட்சியில் தலையிடுவதும் அதை நவாபு எதிர்ப்பதுமாக நிலைமை நீடித்து வந்தது. எனவே, சுற்றி வளைத்து மொகலாயப் பேரரசனால் படையெடுத்துப் பணிவிக்கப் பட்ட மதுரை - தஞ்சை அரசுகள், ஆர்க்காட்டு நவாபுவுக்கு வேண்டா வெறுப்பாகவாவது - விட்டுவிட்டாவது - கப்பம் செலுத்தி வாழ நேர்ந்தது. திருச்சிராப்பள்ளியிலிருந்து திருவிதாங்கூர் வரை பரவிக்கிடந்த நாயக்கர் ஆட்சியையும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாய் விளங்கிய தஞ்சை அரசையும் அடக்கி ஆளுகிறோம் என்ற மமதை ஆர்க்காட்டு நவாபுவையும் அவன் வழி வந்த பெருமக்களையும் சும்மா விடுமா? விடவில்லை என்பதை வரலாறு எடுத்து இயல்புகிறது. 1732 ஆம் ஆண்டுல் ஆர்க்காட்டு நவாபு தஞ்சையிலிருந்தும் மதுரையிலிருந்தும் கப்பம் வசூலிக்கப் படைதிரட்டி அனுப்பினான். நவாபுவின் மகனான சாப்தர் அலிகானும் அவன் மருமகனான சந்தா சாகிபுவும் நவாபுவின் சேனைக்குத் தலைமை தாங்கி வந்தனர். நவாபுவின் சேனை படையெடுத்து வந்த சமயத்திலேதான் மதுரையை ஆண்ட மீனாட்சியின் அரசியல் பெருத்த உள்நாட்டுக் குழப்பத்திற்கு அரசுரிமைப் போட்டிக்கு இரையாகிக் கிடந்தது. முன்னாள் அமைச்சனாயிருந்த நாராயணப்ப ஐயன் என்பவன் முதல் தரத் துரோகியானான். அவன்