பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 118 வழி காணோம்' என்று கையை விரித்தனர் மருத்துவர். எதற்கும் எளிதில் நெகிழாத மருதரசர் நெஞ்சம் நெகிழ்ந்தது. நம் வலக்கை போன்ற ஒரு வீரனைப் பிரியப் போகிறோமே! என்ற எண்ணம் அவர் இதயத்தைத் துளைத்தது கண்களைக் கலக்கியது. சில நாட்களில் நைனப்பர் - உயிரினும் பெயர் பெரிது என நினைந்த வீரத் தமிழர் - காலமானார். மருதரசர் மனம் கலங்கியது. காலஞ்சென்ற நைனப்பரின் மனைவிக்குச் செம்பனூர், சோழகிரி, காட்டுக்காளி, செங்குளம், மருதங்குடி, சாத்தரசன்கோட்டை ஆகிய ஊர்களில் பட்டையச் செய்கள் வழங்கப்பட்டன. ராஜகரம்' எனப்படும் அரசாங்க மரியாதையில் மூன்றில் ஒரு பங்கும் வழங்கப்பட்டது. அரிய குதிரைகளும், அழகிய கொட்டகைகளும், மாடு மனைகளும் மறைந்த வீரரின் குடும்பத்திற்குச் சன்மானமாக வழங்கப்பட்டன. இவற்றை இன்றும் நைனப்பன் சேர்வையின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அனுபவித்து வருகிறார்களாம். வலையனுக்கு வைத்த சிலை: நீலவானைத் தொடுவது போல நிமிர்ந்து நிற்கும் காளையார் கோவில் கோபுரத்திற்குள் நுழையுமுன் வலப்புறத்தில் ஒரு வீரன் கையில் துப்பாக்கியை ஏந்திக் கொண்டிருப்பதையும் அவன் முன் ஒரு கரடி நிற்பதையும் நிலை வடிவிற்காணலாம். யார் இந்த வீரன்? அல்ல. மருதரசருக்கு மிகவும் வேண்டிய வலையன் ஒருவன் அவர் வேட்டையாடப் போகும் பொழுதெல்லாம் உடன் போவது வழக்கம். எத்தனையோ முறைகளில் அவன் வேட்டைத் திறமையைக் கண்கூடாகக் கண்டு மகிழ்ந்தார் மருதரசர். ஒரு நாள் வேட்டையாடச் சென்ற தமக்கு உதவியாய்க் காட்டிற்கு வந்த வலையன் எங்கோ ஒடிப் போய்ப் பெரிய கரடி ஒன்றைச்சுட்டுக் கொண்டுவந்தானாம். அவன் திறமையை மெச்சி வீரனுக்கு வேந்தர் எடுத்து வைத்த சிலையே இன்றும் காளையார் கோவில் வாயிலில் இருப்பது. அரசர்பால் இவ்வளவு அருமையான பாராட்டுதலைப் பெற்ற இவ்வலையனே மருதரசரின் கடைசிக் காலத்தில் அவர் உயிருக்கே உலை வைக்கும் வஞ்சகனாய் மாறினான் தன் வீரத்தை எல்லாம் துரோகிகட்கு அடகு வைத்தான். ஒரு வகையில் வீரத்திற்கும் வஞ்சகத்திற்கும் பேர் போன இவன் சிலையும் பகைவர்க்கும் அருள் புரியும் பண்பாளராகிய மருதரசர் கட்டிய கோபுரத்தினடியில் காட்சிப் பொருளாயிருப்பது பொருத்தந்தானே! பத்தினிக்கு வழிபாடு: மருதுபாண்டியர்கள் ஒழுக்கத்தை உயிரினும் சிறந்ததாகப் போற்றிய பெருமக்கள் மாதவர் நோன்பும் மடவார் கற்பும் நல்லாட்சி இல்லாத நாட்டில் நில்லா, என்னும் உண்மையை உணர்ந்தவர்கள். இத்தகையவர்களின் ஆட்சியிலும் ஒரு சமயம் தவிர்க்க முடியாத வகையில் கொடுமை ஒன்று நிகழ்ந்து விட்டது.