பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 பேராசிரியர் ந.சஞ்சீவி வெட்ட விட மாட்டேன்' என்றார். ஏவலாளிகள், 'ஐயரே, இஃது அரசர் ஆணை' என்றனர். "ஐயா, ஆண்டவன் ஆணையானாலும் அனுமதியேன்" என்றார் அர்ச்சகர். இச்செய்தியை அரசரிடம் சென்று கூறினர் வேலையாள்கள். வேந்தர் வெகுண்டார். யார் அப்படித்தடுப்பவன்? என்று விசாரிக்க உடனே புறப்பட்டார்; அர்ச்சகரைக் கண்டார்; நீர் நம் காளையார் கோவில் குருக்கள் அல்லவா?' என்றார். ஆம் அரசே, என்றார் அர்ச்சகர். "ஏன் இந்த அடம்?' என்றார் அரசர். அடமன்று அரசே தேர் அச்சுக்குத் தேவையான மரம் உங்கள் சீமையில் உண்டு. காளையார் கோவில் காட்டில் உறுதியான மரங்கள் எத்தனையோ இல்லையா? நானும் என்னைப் போல்வார் பலரும் இதோ இந்த மரத்தையும் இந்த மரத்திற்கருகிலுள்ள அந்த மருத மரத்தையும் முறையே பெரிய மருது, சின்ன மருது என்று பல காலமாகப் போற்றி வருகிறோமே! காளையார் கோவிலில் குருக்களாயிருந்து பணி புரிவதெல்லாம் நீங்களும் உங்கள் தம்பியாரும் குறையின்றி வாழ வேண்டும் என்று ஆண்டவனை அருகிருந்து வேண்டிக் கொள்வதற்குதானே அப்படி இருக்க, அடியேன் எப்படி உங்கள் பெயர் கொண்ட இந்த மரத்தை வெட்ட அனுமதிக்க முடியும்? என்றார். குருக்களின் உணர்ச்சி வயப்பட்டபேச்சு மருதரசர் மனத்தையே ஒரு கலக்குக் கலக்கியது. பிறிதொரு மாற்றம் பேசாமல் திரும்பி விட்டார் பெருந்தகை. இன்றும் பெரிய மருது - சின்ன மருதைத் தெய்வமாக வழிபடும் பண்பு பாண்டி நாட்டில் பல பகுதிகளில் உள்ளது. இவ்வாறு உயர்ந்தவனாயினும் இழிந்தவனாயினும், எங்கள் தந்தை - தெய்வம்' என்று மருதுபாண்டியர்களை அந்நாளில் போற்றக் காரணமாய் அவர்கள் பாலிருந்த நற்பண்புகள் பலவற்றுள்ளும் சிலவற்றை இந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இனி நாம் காணக்கூடிய ஒரு சுவையான கதையும் கவிதையும், அவர்கள் பெருமைக்கெல்லாம் காரணம் அவர்கள் எளிமையும் அருளுடைமையும் தியாக உணர்வும் பரந்த உள்ளமும் எல்லாவற்றிற்கும் மேலாக 'மக்களின் தொண்டர் நாம்' என்று கருதி அவர்கள் அரசாட்சி செய்ததுமேயாம் என்னும் உண்மையை வலியுறுத்தும். அரும்பாடு பட்டு மருதரசர் காளையார் கோவில் தேரை உருவாக்கிவிட்டார். வெள்ளோட்டத்திற்கு நாளும் குறித்தார்கள். பொழுது புலர்ந்தது. கதிரவனும் தேரோட்டக் காட்சியைக் காணப் பெரிதும் விரும்பியவன்போல விரைவாக வான வீதியில் கிளம்பி விட்டான். ஒரே மக்கள் கூட்டம் தேர் வடம் பிடித்தாகிவிட்டது. மருது பாண்டியர்கள் தேர்மேலேறி இறைவனுக்கருகில் பூரிப்போடு நின்றார்கள். மருதரசர் மனம் மகிழத் தேரை உருவாக்கிய குப்பமுத்து ஆசாரியும் அருகில் நின்றான். 'காளிஸ்வரா! மருதையா!' என்று மக்கள் முழங்கிக் கொண்டே தேரை இழுக்கத் தொடங்கினார்கள். மூச்சைப் பிடித்தார்கள்: முழுப் பலத்தோடு