பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 174 சான்றாக எத்தனையோ அடையாளங்களைப் பெற்றிருக்கிறேன். அது அவனுடைய பெருந்தன்மையை நிரூபிக்க நல்லதொரு சான்றாகும். <器*↔ 'சின்னமருது கம்பீரமும் கட்டழகும் விநயமும் நிறைந்த வியத்தகு மனிதன் நல்ல நடத்தையும் எளிதில் எவர்க்கும் காட்சி தரக்கூடிய இயல்பும் படைத்தவன். தன் தலையின் அசைப்பே நாட்டின் சட்டமெனக் கருதும் மக்களின் தலைவனாய் அவன் விளங்கிய போதிலும், தனிக் காவலாளியின் பாதுகாப்புக் கூட இல்லாமல் திறந்த வெளியில் வாழ்ந்து வந்தான். 1795 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நான் அவனைக் காணச் சென்ற போது அவன் இல்லத்தின் உள்ளே நுழைய விரும்பிய எவர்க்கும் சுதந்தரமாக உள்ளே வரவும் வெளியே போகவும் எவ்விதத் தடையும் இல்லை என்பதை நேரில் கண்டறிந்தேன். அச்சமயத்தில் குடிமக்களின் தந்தையாய் விளங்கிய அந்த மாவீரனுக்குக் கடவுள் கருணைபுரிய வேண்டும் என்பதே அவன் நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய பிரார்த்தனையுமாய் இருந்தது. அவன் நாடு வழியாகச் செல்லும் போது ஏற்பட்ட சாதாரணமான ஒரு சந்திப்புக் காரணமாகவே அவன் எனக்கு நண்பனாகிவிட்டான். அதிலிருந்து நான் மதுரையில் இருந்த காலமெல்லாம் அவன் எனக்கு உயர்ந்த ரக அரிசியையும் சுவை மிக்க பழங்களையும் அனுப்பத் தவறியதில்லை. சிறப்பாக, கெட்டியான தோலோடு கூடிய சுவை மிக்க பெரிய ஆரஞ்சுப் பழங்களை அவன் எனக்கு அன்போடு அனுப்பி வந்தான். அத்தகைய அருமையான பழங்களை நான் இந்தியாவின் வேறு எப்பகுதியிலும் கண்டதில்லை. 'சின்ன மருதுதான் எனக்கு முதன் முதலாக ஈட்டி எறியவும்,' வளரியைச் சுழற்றவும் கற்றுக் கொடுத்தவன். வளரி என்னும் இவ்வாயுதம் இந்தியாவிலேயே தமிழ்ப் பகுதியிலேதான் பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும், ஆற்றலும் திறமையும் படைத்த ஒருவர் முந்நூறு அடித் துரத்தில் உள்ள ஒரு பொருள் மீது கூட வளரியை வியக்கத் தக்க வகையில் குறி பார்த்து எறிந்து வெற்றி பெறலாம். இத்தகைய வீர மனிதனையே நான் பிற்காலத்தில் யுத்தம் காரணமாகக் காட்டு விலங்கைப் போல விரட்டிப் படுகாயப்படுத்திச் சாதாரண வேலையாளர்களால் பிடிக்க நேர்ந்தது. அதன் பின் முறிந்து போன தொடையோடு சிறையில் அவன் நொந்து கிடந்ததையும், இறுதியாக வீரமிக்க தன் அண்ணனோடும், அவன் வீரத்திற்குச் சிறிதும் குறையாத மகனோடும், உயிர்த்தோழர் பலரோடும் சாதாரணத் துக்குமரம் ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்ததையும் காண நேர்ந்தது. 'இதே காளையார் கோவில் வழியாகச் சில மாதங்களுக்கு முன்பு தான் நானே பயணம் செய்தேன். அப்போது என்னை வெள்ளைமருது