பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 6 என்பதே அந்த அடிமை ஒப்பந்தத்தின் முடிவு. இத்தகைய ஒப்பந்தத்தின் மூலம் மன்னர் மன்னர்களை எல்லாம் அடி பணிய வைத்த தமிழகத்தின் அரசியல், முன்னிலும் பன்மடங்கு அடிமை அரசியலாயிற்று ஆர்க்காட்டு நவாபுவும் வெற்று அலங்காரப் பெ ாம்மையானான் அண்டிவயிறு ఇుர்க்க வந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் வெள்ளையர், வரி வாங்கும் அதிகாரிகளாய் மாறினர். நாட்டு மாந்தரெல்லாம் - நம்போல் நரர்க ளென்றுகருதார், ஆட்டு மந்தையாமென்று - உலகை அரசர் எண்ணிவிட்டார்' என்று நெஞ்சம் கொதித்துப் பாரதியார் பாடியது ஆர்க்காட்டு நவாபுவின் அவமானச் செயலுக்கு எவ்வளவு பொருத்தம் ஆர்க்காட்டு நவாபுவின் ஆண்மையற்ற செயலால் தமிழகம் வெள்ளைப் பறங்கியர்க்கு அடிமையாயிற்று. வரி வாங்கும் அதிகாரிகள் என்ற பெயரால் அவ்வாங்கில நாடோடிகள் செய்யத்தகாத அநீதியெல்லாம் செய்தனர். மக்களைக் கசக்கி, அவர்களிடமிருந்து பணத்தையும் கண்ணீரையும் கப்பமாகக் கொண்டனர்:தமிழகத்தின் செல்வத்தையெல்லாம் சூறையாடுவதையே அன்றாடத் தொழிலாகக் கருதினர். வாணிபம் செய்ய வந்த ஆங்கில நாடோடிகள் தங்கள் ஆணையைக் குறையின்றிச் செலுத்தக் கிழக்கு இந்தியக் கம்பெனியின் பெயரால் படையையும் பயன்படுத்தினார்கள். அலைகடலையும் வென்று, அப்பாலுள்ள நாடுகளை எல்லாம் தன்னடிப்படுத்திய தமிழகத்தின் கரைகளில் வெள்ளையர் படை இங்கிலாந்திலிருந்து வந்து இறங்கியது. பண்டங்களை விற்க வந்த கம்பெனியின் கிடங்குகளில் பேய் வாய்ப்பீரங்கிகளும், நச்சுக் குண்டுகளும், நானாவிதத் துப்பாக்கிகளும் நிரம்பின. அழுக்காறு கொண்டு, ஆண்மை குன்றி வாழ்ந்த குறுநில மன்னர்கள் - பாளையக்காரர்கள் இந்நிலை கண்டார்கள். அவர்கள் தொடைநடுங்கியது. நெல்லிக்காய்கள் போலச் சிதறிக் கிடந்த அப்பாளையக்காரர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்திப் பறங்கித் துரைமார்கள் அரசியற்சூது ஆடத் தொடங்கினார்கள்; தங்கள் நாட்டிலிருந்து வரவழைத்த வெள்ளைப்படைக்கு உறுதுணையாகக் கூலிப்படையையும் ஏராளமாகச் சேர்க்கத் தலைப்பட்டார்கள் பாளையக்காரர்கட்கு இடையே ஏற்கெனவே எரிந்து கொண்டிருந்த பொறாமைத் தீக்குப் புதுநெய் வார்க்கும் திருப்பணியில் இறங்கினார்கள் ஒருவருக்கு எதிராக மற்றவரைத் தூண்டி விட்டுப் பாளையக்காரர்களிடையே தீராப்பகையை வளர்த்தார்கள். இவ்வளவு சூழ்ச்சிகட்கும் பெரும்பாலாரான பாளையக்காரர் இரையாயினர். கண்ணிருந்தும் குருடர்களாய், வாயிருந்தும் ஊமையர்களாய் இருக்கும்படி அவர்கள் வாழ்க்கை மாறியது. அடிமை இருள் தமிழகத்தைக் கவிந்து கவ்விக் கொண்டது.