பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 பேராசிரியர் ந.சஞ்சீவி குமுறிக் கொண்டிருந்த செய்தியைப் பற்றியும் முன்பே படித்திருக்கிறோம். 'கப்பம்' என்று கேட்ட தனக்குக் கத்தியை உருவிக் காட்டிய மறவர்கள், தன்னையும் தனக்குத் துணையாய் நிற்கும் கம்பெனிக் கூட்டத்தையும் நாசமாக்கச் செய்யும் முயற்சிகளை அறிந்து சீற்றம் கொண்ட நவாபு சேனை ஜோசப்பு ஸ்மித்து என்பான் தலைமையில் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய செய்தியையும் அறிந்திருக்கிறோம் அல்லவா? அதற்குமேல் நடந்தவற்றைப் பார்ப்போம். ஜோசப்பு ஸ்மித்து வெற்றித் திமிரோடும், நவாபு சேனையோடும், பிற கூலிப் படைகளோடும் சிவகங்கைச் சீமையை நோக்கிச் சீறி வருவதை அறிந்தான் முத்து வடுகநாதன். அவன் மீசை துடித்தது; கண்கள் சிவந்தன; அவன் தன் இரு கண்கள் போன்ற மருது பாண்டியரைப் பார்த்தான். ‘அரசே! அஞ்ச வேண்டா அந்நியப் படையின் அடிச்சுவடும் காணாத வகையில் அவர்களைக் கண்ட துண்டமாக வெட்டிப் புதைப்போம்!' என்று அண்ணனும் தம்பியும் ஒரே குரலில் உரைத்தனர். மருது பாண்டியரின் நெஞ்சுறுதியைக் கண்டு முத்து வடுகநாதன் மகிழ்ச்சி கொண்டான். அவனது மகிழ்ச்சியை இரு மடங்காக்கினாள் அவனுடைய் வீரபத்தினியான வேலு நாச்சி என்பாள். ஆம்; முத்து வடுகநாதனுக்கு வாழ்க்கைத் துணைவியாய் அமைந்த வேலு நாச்சி, வீர நெஞ்சம் படைத்தவள் சின்ன மருதுவிடம் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் கலையைக் கசடறக் கற்றவள். அத்தகைய பெண் மணியின் நெஞ்சில் ஆண்மை பொங்காது இருக்குமோ? தலைவரே, தொடுங்கள் போரை தமிழகத்தின் மானத்தைக் காக்க இந்தப் பெண் இரத்தமும் பயன்படட்டும்' என்று அவள் உள்ளம் கருதியதைத் தன் கணவனிடம் வீரமொழிகளால் உணர்த்தினாள். வீரிட்டு எழுந்தான் முத்து வடுகநாதன். தன் தலைநகரை விட்டுக் காளையார் கோயில் காட்டில் புகுந்து கொண்டான். காரணம், அது கட்டுக்காவலும் வலிமையும் பொருந்தியதோர் அரணாய் விளங்கியதே ஆகும். எளிதில் எவரும் அதனுள் புகுந்து வெற்றி பெறல் அரிது. இதை நன்குணர்ந்த நவாபு புதுக்கோட்டை மன்னனுக்கும் ஆசை மொழி சொல்லி, அவனையும் தன் உதவிக்கு வரும்படி அழைத்தான். கம்பெனிப் படையைக் கர்னல் பான்ஷோர் என்பவன் நடத்தி வந்தான். காசாசை பிடித்த ஒரு கயவன் காளையார் கோவில் அரண் பற்றிய உளவுகளையெல்லாம் பகைவர்க்குத் தெள்ளத்தெளிய எடுத்துரைத்து விட்டான். அவனைக் காசால் அடித்து மயக்கி வைத்திருந்த நவாபுவின் சேனையும் கம்பெனிப் படையும் புயலெனச் சீறி அரணுக்குள் பாய்ந்தன. துரோகியின் செயலையும் பகைவர்களது வெற்றியையும் கண்ட முத்து வடுகநாதன் உள்ளம் எரிந்தது. பகைவரை வெட்டி வீழ்த்துங்கள்! குண்டுக்குக் குண்டு குத்துக்குக் குத்து வெட்டுக்கு வெட்டு ...............