பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காதத மருதுபாண்டியர் 52 படையை எதிர்ப்பது போலவே தங்கட்கு எதிராகப் பரவும் கதைகளையும் பழிச் சொற்களையும் எதிர்த்துப் போரிட்டார்கள் சிதைந்து ஓடும் மறவர் குடிமக்களை அன்புக் கயிற்றால் பிணித்து, அவர்கட்குக் கம்பெனிச் சூழ்ச்சியை அம்பலப்படுத்தி, அவர்கள் நெஞ்சில் விடுதலை விளக்குச் சுடர் விட்டெரியச் செய்தார்கள். இவ்வளவு செய்தும், அவர்களால் கம்பெனி அதிகாரிகளது பொய்க் கருத்துப் பரப்பை முற்றிலும் நிறுத்த முடியவில்லை. உடையணத்தேவன் பட்டாபிஷேகத்தை ஒட்டிப் பலமான மழை பெய்தது. அவ்வாறு மழை பெய்தது இறைவனது ஆசீர்வாதம் என்ற அளவிற்கு மக்களை நம்பும்படி செய்தனர் கம்பெனி வெள்ளையர். ஆனால், உண்மையில் அப்போது பெய்த அந்தப் பலத்த மழை கம்பெனிப் படைகட்குக் கிடைத்த பெரிய சாபம் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். கம்பெனிப் பட்டாளம் உடையணத்தேவரை ராஜா வாக்கிவிட்டோம். இச்செயல் பலம் பொருந்திய நம் பீரங்கியாலும் பிளக்க முடியாத தமிழர் படையின் ஒற்றுமையை இனித் தவிடு பொடியாக்கிவிடும்' என்று இறுமாப்புக் கொண்டு எழுந்தது. ஆம், சாதியும் சடங்கும் பொய்யானவையே. ஆனால், பொய்யான அவை எவ்வளவு பொல்லாதவை, பயங்கரமானவை, வலிமை வாய்ந்தவை என்பதற்கு இவ்வரலாற்று நிகழ்ச்சியே சரியான சான்றாகும். கம்பெனிப் படைகள் 17 ஆம் நாள் புதிய 'ராஜா'வின் பட்டாபிஷேகத்திற்குச் சரியான ஐந்து நாள் கழித்து மேலுரை நோக்கிக் கிளம்பின. மேலூரை அடைவதற்குள் அவர்கள் பட்ட அல்லல் அளவிட்டுரைக்க முடியாதது. அச்சமயத்தில் ஆண்டவனது ஆசி' என்று மக்களால் நம்பப்பட்ட பெருமழை பெய்து, எங்கும் சேறாய்க் கிடந்தது. பீரங்கிகளையும் போர்த் தளவாடங்களையும் சுமந்து கொண்டு, பலத்த மழையால் பாழ்பட்டுக் கிடந்த அப்பாதையைக் கடக்க முடியாமல், கம்பெனிப் படைதிண்டாடித் திணறியது. கடைசியாகச் சிங்கம் பிடாரியைச் சேர்ந்தது கம்பெனிப்படை அங்கிருந்து பிரான் மலையில் வீர மறவர்கள் தங்கியிருக்கும் செய்தி அறிந்து, அம்மலையைக் காட்டுத்தனமாகத் தாக்கியது வெள்ளைப்பட்டாளம். பிரான் மலை, இறைவன் இருப்பதற்கு ஏற்ப கோவிலாய் மட்டுமன்றி, எண்ணற்ற வீரர்கள் தங்கிப் போர் புரிவதற்கு ஏற்ற பலம் நிறைந்த கோட்டையாயும் விளங்கியது. இம்மலையின் உச்சியிலிருந்து பார்த்தால், குன்றக்குடி, காளையார் கோவில், திருக்கோட்டியூர் என்னும் ஊர்கள் நன்றாகத் தெரியும். மேலூர் ஆனை மலையும் அழகாகத் தோன்றும். பொதுவாக எந்த மனிதனாலும் ஏறிக் காண முடியாத உயர்ந்த உச்சியையும், பலம் பொருந்திய பாறைகளின் பாதுகாப்பையும், வலுவான கோட்டை மதில்களையும் பெற்றுள்ளதாகிய