பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 பேராசிரியர் ந.சஞ்சீவி உடம்பெல்லாம் கொதிப்பேறி அவர்கள் ஆரவாரத்தோடு எழுந்தார்கள்: அதற்குள் பெரிய மருது எழுந்ததைக் கண்டு அமைதியாய் அமர்ந்தார்கள். ஒரு வெள்ளி நாணயத்தை எடுத்துச் சுண்டிக்காட்டினான் பெரிய மருது: அதைக் கீழே இட்டுக் காலால் மிதித்தான் மீண்டும் கையில் எடுத்தான்; பார்த்தீர்களா இவ்வெள்ளிப் பணத்தை இதில் இருப்பது தமிழ் எழுத்தா, தமிழ் இலச்சினையா? இல்லை. இது கம்பெனியான் பணம். இந்தப் பிச்சைக் காசுக்கு ஆசைப்பட்டு நம்மவர் அறிவை விற்கின்றனர்; அருமைத் தாயினும் சிறந்த நாட்டின் மானத்தைக் காற்றில் பறக்கவிடுகின்றனர். வீரர்களே, இந்தப் பணத்தைத் தீண்டாதீர்கள் காறி உமிழுங்கள் நமக்குக் காசன்று பெரியது; மானம் - மறவர் சீமையின் சுதந்தரந்தான் பெரிது!’ என்று கூறிக் கொண்டே உறுதியான அந்த வெள்ளி நாணயத்தை இரண்டாக வளைத்தான். அதைக்கண்ட தமிழ் மறவர் தோள் தட்டி எழுந்தனர். எட்டுத் திக்கிற்கும் செல்லுங்கள் விடுதலைக் கனலை மூட்டுங்கள் ஆம். விடுதலை விடுதலை அதுவே நம் உயிர்' என்று ஆவேசத்துடன் கூவினான் பெரிய மருது. ஓங்கி உயர்ந்த அப்பெருமகனது வீர முழக்கத்தைக் கேட்ட மறவர் கூட்டம், எண்டிசையிலும் மாயமாய் மறைந்தது. அவர்களோடு சேர்ந்து ஊமைத்துரையும் மருது பாண்டியரும் எங்கோ சென்று விட்டனர். காளையார் கோவிலைப் பிடித்துவிட்டான் கம்பெனியான். ஆனால், வீரமிக்க ஊமைத்துரையையும் அவன் உயிர்த் தோழர்களான மருது பாண்டியரையும் பிடிக்க முடியவில்லை. எவ்வளவோ அழிவிற்குப் பின் இன்னுமா இந்நிலை' என்று கம்பெனி அதிகாரிகள் ஆத்திரம் அடைந்தார்கள். கர்னல் அக்நியூதுரையிடமிருந்து அதிகாரங்களை எல்லாம் ஏற்றுக் கொண்ட புதிய தளகர்த்தன் மக்காலே துரை, மூக்கெல்லாம் சிவந்தவனாய், அவர்களைப் பிடிக்காமல், பிடித்துக் கொல்லாமல் விடுவதில்லை' என்று துப்பாக்கியைத் தூக்கினான்.