பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 70 சொற்களில் அயல் நாடாகிய பெல்ஜியத்திற்குத்தான் ஆறுதல் கூறுகிறார் என்றாலும், தென்பாண்டி நாட்டில் பிறந்த அந்தத் தீந்தமிழ்க் கவிஞர் பெருமானார் தம் உள் மனத்தில் தம் தாயகத்திற்காக நடந்த விடுதலைப் போரில் பலியான கட்ட பொம்மனை, ஊமைத்துரையை, மருது பாண்டியரை எண்ணியே, தம் கொதிக்கும் உள்ளத்திற்கு ஆறுதல் கூறிக் கொள்ளவே அவ்வாறு பாடினார் என்று தோன்றுகிறது. இவ்வாறு தம் நாட்டுப் பெருங்கவியின் - மக்களின் - உள் மனத்தை எல்லாம் உருக்கும் ஆற்றல் படைத்த வாழ்வு வாழ்ந்த மருது பாண்டியரைத் தமிழகத்தின் விடுதலைக்காகப் போரிட்ட வீரர்களாக மட்டும் கருதுவது தவறாகும். அவ்வீரர்களை அடிமை வாழ்வை எதிர்த்து விடுதலைப் போர் புரிந்த மாஜினி, கரிபால்டி, ஆபிரகாம் லிங்கன், ஜியார்ஜ் வாஷிங்டன் போன்ற உலகப் பெருவீரர்களோடு சேர்த்து வைத்துப் போற்றுவதே பொருத்தமாகும். மருது பாண்டியரைப் பெற்றெடுத்த பூமிக்கு அவர்கள் எந்த ஆயுதப் பலத்தை ஆள் பலத்தாலும், ஆயுதப் பலத்தாலும் வெல்ல முடியவில்லையே என்று எண்ணித் துடித்தார்களோ, அந்த ஆயுதப் பலத்தை வெல்லத்தக்க ஒரே கருவி அன்பு பலமே என்று உலகில் நிறுவிக் காட்ட வல்ல ஒரு மகாத்துமாவைப் பெற்றெடுக்க ஒன்றரை நூற்றாண்டுகள் சென்றன. ஆயினும், நாம் பேறு பெற்றவர்கள் மருது பாண்டியரும் நம் முன்னோர்களும் காண முடியாத விடுதலையை நாம் காணும் பேறு பெற்றோம் என்று நினைக்கும்பெழுது இன்ப வெள்ளம் நம் உள்ளத்தில் பொங்குகிறது. ஆயினும், அந்தக் களி வெறியில் நாம் இன்று தலை நிமிர்ந்து துய்க்கும் விடுதலையை அடைவதற்காகப் போராடிப் போராடி உயிர்துறந்த உத்தமர்கட்குத் தலை வணங்கி நன்றி செலுத்த வேண்டிய கடமையை மறவாது இருப்போமாக! 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. என்பது வள்ளுவர் வாக்கன்றோ? 'பூர்விக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமாகப் பத்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஒரிருவர் தோன்றினாலும், அவர்களுக்குத்தக்க மதிப்பிராது எனத் தெளிந்து கூறினார் நாட்டுப் பற்றோடு தொலை நோக்கும் சேரப் படைத்த செந்தமிழ் நாட்டுப் புலவர் பாரதியார். மகான்கள் என அவர் கூறியது மாவீரர்கட்கும் முற்றிலும் பொருந்தும். நம் தாய் நாட்டின் வருங்காலம் ஒளியும் பயனும் படைத்த பொற்காலமாக வேண்டுமானால், எண்ணற்ற மாவீரர்கள் - மருது பாண்டியர்கள் தேவை. விடுதலைக்காகப் போராட அல்ல - போராடிப்