பக்கம்:மானிட உடல்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு மண்டலம் 95 சிறுகுடலிலுள்ள பொருள்கள் கீழ்ச் சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கும் இடையிலுள்ள வால்வை அடையும் பொழுது, திடப் பொருள்கள் உறிஞ்சப் பெறுதல் முக்கியமாக முற்றுப் பெற்றுவிடுகின்றது. அவை பெருங்குடல் வழி யாகச் செல்லும்பொழுது மலத்திலிருந்து நீர் அகற்றப் பெறுகின்றது. ஆகவே, பெருங்குடல் மிகச் சுறுசுறுப்பாக இல்லாதவரை அல்லது அதிக அளவு பாய்மம் நுழையாதவரை, அவை சரியாக அமைந்த நிலையில் வெளிப்படுகின்றன. பெருங் குடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன; அவை சிறுகுடல் முடிவுறும் பகுதியிலும் காணப்பெறுகின் றன. பாக்டீரியா உடலுக்கு மிகவும் இன்றியமையாதவை : அவை குருதியுறை,கலுக்குக் தேவைப்படக் கூடிய K-விட்ட மின் சத்தையும் B-விட்டமினின் பல பகுதிப் பொருள்களை யும் உற்பத்தி செய்கின்றன. சில சமயங்களில் பாக்டீரியா வைச் சிதைக்கக் கூடிய மருந்துச் சாக்குகளைத் தொடர்ந்து உட்கொள்ளுவதனுல், சிறுகுடலிலுள்ள கிருமிகளேக் கொன்று K-விட்டமின் குறைவினை உண்டாக்குகின்றது. இதற்கு மாருக, பெருங்குடலிலுள்ள பாக்டீரியா 0-விட்டமின் போன்ற சில விட்டமின்களேச் சிதைக்கின்றன. இந்தக் கிரியை நடைபெறும் தாக்கிற்கேற்றபடி விட்டமின் சத்துக்களைக் கொடுப்பதில் யோசனையை மேற்கொள்ள வேண்டும். காடு முரடான, செரிமானம் ஆகாத பொருளே அதிக அளவில் உட்கொள்ளாதவரை, மலப் பொருளில் சிறிதளவும் உணவுப் பொருள் இருக்காது. மலப் பொருளில் மேலே கூறிய பாக்டீரியா, பெருங்குடல் வழியாக அகற்றப்பெற்ற பொருள்கள் சீழ் உயிரணுக்கள் அல்லது வெள்ளே உயிரணுக் கள், சிதைந்த அணேச் சவ்வு இழையம் ஆகியவை அடங்கி யிருக்கும். பெருங் குடலில் அழுகுதலால் உண்டாகும் வாயு வும் அவற்றுடன் சேர்ந்து வெளிப்படுதல் சர்வ சாதாரணம். மலக்குடல் மலக்குடல் அமைப்பில் பெருங்குடலே ஒத்துள்ளது. மலம் எருவாய்க் தசைகள் வழியாக எளிதில் வெளிப்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/119&oldid=865842" இலிருந்து மீள்விக்கப்பட்டது