பக்கம்:மானிட உடல்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மானிட உடல் என்றே சொல்ல வேண்டும். சுரப்புநீர்களே யுண்டாக்கவல்ல எபிதீலியங்கள் இாைப்பையிலும் குடலிலும் படர்ந்துள்ளன. நார்போல் அமைந்துள்ள எபிதீலியமே கல்விாவின் பெரும் பகுதியாகும். பல்வேறு செயல்களைக் கொண்ட பல்வேறு வித எபிதீலிய அமைப்புக்களுக்கும் பல எடுத்துக்காட்டுக்கள் தாலாம். அவைபற்றிய விளக்கம் பின்னலுள்ள அத்தியாயங் களில் காப்பெற்றுள்ளது. குறிப்பிட்ட திட்டமான இழையங்களுக்கு வேறு எடுத் துக் காட்டுக்களும் உள. அவை : தசை இழையம், (படம்-2) படம் 2. என்புடன் இயைந்த தசை இழையம் எலும்பு சம்பந்தப்பட்ட இழையம், காம்பு இழையம், கொழுப்பு இழையம் ஆகியவை. அவற்றின் இயற்கைப் பண்புகளே எளிதில் அறிந்துகொள்ளலாம். அதிகமாகத் கெரியாத வேறு இழைய அமைப்புக்களும் உள்ளன. அவை: குருதிக் குழல்கள் போன்ற குழல்களாலமைந்த காரைகளின் மேற்புறமாகவுள்ள எண்டோதீலிய இழையம், மார்பு அறை, வயிற்றறை போன்ற உடம்பின் உட்புறத்தில் மூடியுள்ள மெசோதீலிய இழையம் போன்றவை. இாண்டு அல்லது இரண்டற்கு மேற்பட்ட இழைய அமைப்புக்கள் ஒன்று சேர்த்து ஒரு திட்டமான முறையில் அமைந்து ஒரு தனிப்பட்ட நிலையிலிருந்துகொண்டு பிசத்தி யேகமான செயலைப் புரியும் பகுதியை உள்ளுறுப்பு என்று வழங்குவர். எடுத்துக்காட்டாக, உடலிலுள்ள இதயம் ஒர் உள்ளுறுப்பு ; கல்லீரல் மற்ருேர் உள்ளுறுப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/12&oldid=865844" இலிருந்து மீள்விக்கப்பட்டது