பக்கம்:மானிட உடல்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மானிட உடல் பித்தநீரின் அளவு உணவுப் பொருள்களுக் கேற்றவாறு அல்லது மருந்துச் சாக்குகளுக்கேற்றவாறு மாறுபட்டபோகி லும்,அது தொடர்ந்தாற்போல் கல்லீரலில் சுரந்துகொண்டே யிருக்கிறது. அது உணர்ச்சியினுலும் பாதிக்கப்பெறுகின் நிது. வலியும் வெகுளியும் அது சுரந்து பாய்வதைத் தடை செய்கின்றன. இருபத்து நான்கு மணி நேரத்தில் இரண்டி லிருந்து மூன்று கோப்பைவரையிலும் கல்லீரல் வழக்கமாகப் பித்தைேரச் சுரந்துகொண்டே யிருக்கின்றது. பித்தநீர் கல் விாலுக்கு வெளியிலிருக்கக் கூடிய பிரதம கல்லீரல் தாம்பை அடையும்வரை, கல்லீரலிலுள்ள என்றும் பெரிதாகிக் கொண்டே யிருக்கும் துனம்புகளின் வழியாகப் பாய்கிறது. பித்த நீர்ப் பாதைகள் கல்விால் தாம்பும் பித்தநீர்ப் பையுடன் சேரும் பிக்கப் பைக் தூம்பும் ஆங்கில எழுத்து Yன் இரு புயங்கள் போல் அமைகின்றன ; பொதுத் தாம்பாகிய அடித்தண்டு முன்சிறு குடலில் நுழைகின்றது (புகைப்படம் - கஉஐப் பார்க்க). பித்தப்பை என்பது ஒரு நீண்ட குறுகிய பையாகும் ; அது கிட்டத்தட்ட முன் விசல் அளவு நீளம் உள்ளது ; காற்றடிக் காத பலூன் போன்றது. அதன் உட்புறம் சளிச் சவ்வால் அமைந்து, மெல்லிய தசைச் சுவரால் ஆனது. பித்தப்பை பயனுள்ள பல செயல்களைப் புரிகின்றது ; ஆனல், அவ்வுறுப்பு இன்றியமையாதது அன்று. கற்கள் சிக்கிக்கொள்வதாலும் நோய் பிடிப்பதாலும் அதனை நீக்கிய பிறகு செளகர்யமாக உயிர் வாழ்வோர் பலர். குதிரை, எலி போன்ற பிராணிகளுக்குப் பிக்கப் பையே இல்லை. மனித னிடம் கல்லீரலிலிருந்து பித்தப்பைத் தாம்பின் வழியாக பிக் தப்பையினுள் பித்தநீர் பாய்கிறது ; பித்தப்பை அப் பிக்க நீரை ஐக்கில் ஒரு பங்கு கோப்பையளவு சேமித்து வைத்து செரிமானக்தி ற்குத் தேவைப்படுங்கால் முன் சிறுகுடலில் விடுவிக்கின்றது. செரிமானம் நடைபெறுங்கால் சிறிதளவு பித்தநீர் கல்லீரலிலிருந்து நோாக முன் சிறுகுடலில் பாய் கின்றது. பிக்கப்பை என்ற இந்தச் சேம இடம் இல்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/128&oldid=865862" இலிருந்து மீள்விக்கப்பட்டது