பக்கம்:மானிட உடல்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மானிட உடல் களில் கையாளப் பெறும் இலேசான துணுக்குகளினின்றும் கனமான துணுக்குகளைப் பிரித்தெடுக்கவல்ல பெருவேகக் தைக் கொண்ட நடுவிலக்கி என்ற ஆய்கருவியைக் கொண்டும், பேருருவத்தைத் தரும் எதிர் மின்னி நுண்ணணுப் பெருக்கி யைக் கொண்டும் சைட்டோபிளாஸத்திலுள்ள பல்வேறு அமைப்புக்களைக் கண்டறியலாம். அவற்றுள் சிலவற்றில் துாைப்புளியங்கள் உள்ளன. இப் புளியங்கள்தாம் உடலில் நடைபெறும் பல்வேறு வேதிமாற்றங்களைத் துரிதப்படுத்து பவை ; ஏனையவற்றில் அதிகமான பிசிகங்கள் உள்ளன. இன்னும் சில ஒருவகை உயிரணுக்களின் தனிப்பட்ட செயல் களுடன் தொடர்புள்ளவை; அவை நுண்பொடிகள் போன்ற சுரப்புநீர்களே உணர்த்துபவை. மற்றுமுள்ள பொருள் ஊட்டத்தைத் தருவதாகும். பல்வேறு இழையங்களிலும் உள்ளுறுப்புக்களிலுமுள்ள உயிரணுக்களே நுண்ணணுப் பெருக்கி வழியாகப் பார்த்தால் அவற்றின் வேறுபாட்டினை அறியலாம். அவை அளவிலும் வடிவத்திலும், சாயலிலும் உள்ளனுக்களின் எண்ணிக்கையி லும் சைக்ளோபிளாஸ்மிக் பொருளின் பண்புகளிலும் வேறுபடுகின்றன. அவற்றின் தோற்றத்தாலும், சுரப்பிகள், நார்கள், சிக்கலான இழைகள் ஆகியவற்றை உண்டாக்கிக் கொண்டு ஒன்ருேடொன்று கொண்டுள்ள தொடர்பாலும் அவற்றை இனம் கண்டுகொள்வது மிகவும் முக்கியம் ஆகும். உயிரணுக்களே, உடலில் உண்டாக்குவதைக் கவிர பிரத்தியேகமான ஊடகங்களிலும் உண்டாக்கலாம். தக்க அக்கறை கொண்டு அவற்றைப் பராமரித்தால், வரையறை யின்றி இனம்பெருக்கும் பண்பினையும் அடையச் செய்யலாம். இவ்வாறு பண்படுத்தி வளர்த்தாலும், அவற்றிடம் அவற்றின் சிறப்பியல்புகள் மாருதுள்ளன ; வளர்ச்சிமுறையிலும் அவை தனி வீறுடன் மிளிர்கின்றன. உயிரணுப் பிரிவு ஒர் உடலின் ஆயுட்காலத்தில் ஒவ்வொரு உள்ளுறுப்பி அம் பல உயிரணுக்கள் சிதைகின்றன; அவற்றிற்குப் பதிலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/16&oldid=865928" இலிருந்து மீள்விக்கப்பட்டது