பக்கம்:மானிட உடல்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்டோகிரீன் மண்டலம் 145 எபைன்பிாைன் அடித்தலை முன் சுரப்பியைத் துண்டி AபH-ஐச் சுரக்கக் காரணமாகி அது மீண்டும் அட்ரெனே காடடிகல் ஹார்மோனின் சுறுசுறுப்பான உற்பத்தியை விக்ாவிக்கிறது என்பதற்கும் ஆதாரம் உள்ளது. இது ஒரு கவர்ச்சிகரமான கற்பிதக் கொள்கையாகும். காரணம், அது உண்மைதான் என்று நிரூபிக்கப் பெறின், அது இடுக்கண் துலங்கலில் மாங்காய்ச் சுரப்பியின் புறணி பங்கு கொண் டிருப்பதை விளக்குதல் கூடும். எனினும், மாங்காய்ச் சுசப்பி யின் அகணியைத் தாண்டிவிடும் நரம்புத் துடிப்புக்களே அடித்தலை முன் சுரப்பியையும் தாண்டி ACTH-ஐச் சுசக்கச் செய்கின்றன என்பது பெரும்பாலும் நடைபெறக் கூடியதே. கணையம் நாம் அறிந்த பழங்கால மருத்துவ நூல்களில் எபர்ஸ் பேப்பிரஸ் என்ற எதிப்திய நூலும், ஒர் இந்து வடமொழி மருத்துவ நூலும், இனிப்புச் சிறு நீராலும் கசை உருகு வதாலும் ' புலனுகக் கூடிய ஒரு நோயைப்பற்றிக் கூறுகின் றன. பண்டைய மருத்துவர் விளக்கியுள்ள அந்த நோயை இனங்கண்டு கொள்வது நம்முடைய பிரச்சினே அன்று. அது தான் டயாபெட்டிஸ் மெல்லிடஸ் என்பது (சருக்கரை நீரிழிவு). பல நூற்ருண்டுகளாக நீரிழிவு நோய்க்கும் கணேயத் திற்குமுள்ள உறவுமுறையைப்பற்றி யாகொரு ஐயமும் எழ வில்லை. அதற்குக் காரணம் அந்தச் சுரப்பியின அமைப்பே யாகும. கணையம் ஒரு தாம்பில்லாச் சுரப்பியாகவும் வெளிப்புற மாகச் சுரக்கும் சுரப்பியாகவும் செயற்படுகினறது. கனே யத்தின் பெரும் பகுதியிலுள்ள உயிரணுக்கள் தம்முடைய சுரப்பிச் சாறுகளை ஒரு தாம்புகளின் அமைப்பினுள் சொரி கின்றன. சிறு தாம்புகள் யாவும் கம்மிடமுள்ள சாறுகளே ஒரு பெரிய தாம்பிற்குக் கொண்டு செல்லுகின்றன. அப் பெரிய தாம்பு முன் சிறுகுடலினுள் நுழைவதறகு முன்பு பொதுப் பித்தநீர்த் தாம்புடன் ஒன்று சேர்ந்துவிடுகின்றது. மேற்கூறிய கணைய உயிரணுக்களால் உற்பத்தி செய்யப்பெற்ற சாறுகள் யாவும் ஹார்மோன்கள் அன்று ; அவை யாவும் மா. உ. 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/169&oldid=865949" இலிருந்து மீள்விக்கப்பட்டது