பக்கம்:மானிட உடல்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மானிட உடல் றிருக்கின்றது ; ஆனல், அதனிடம் பயன்படும் முறையில் செயற்படும் திறன்கள் அமையவில்லை. ஒரு விதிவிலக்கு இந்த இரண்டு வகை உயிரணுக்களேயும் ஒர் உள்ளுறுப் பில் காணலாம். இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு; அதுதான் மூளை. அங்கு முளைக்கரு கிலேபெற்றிருக்குங் காலத்தில் நாம்பு உயிரணுக்கள் வளர்ச்சியுறுகின்றன; ஆனல், நம் வாழ் நாளில் அவை அழிய நேரிட்டால், அவற்றின் இடத்தைப் புதிய அணுக்கள் பெற முடியாது. இனப்பெருக்க முறையில் பார்த்தால் எலும்புடன் ஒட்டிய தசைகளும் இதயத்தின் தசையும் மிகக் குறைந்த உயிரணு வளர்ச்சியைக் கான் பெற் அறுள்ளன. ஆயினும், ஏற்கெனவே அமைந்திருக்கும் உயி சனுக்களில் புதிய பொருள்களே ஏற்றுக்கொண்டு அளவில் அதிகரிக்கலாமே யன்றி, உயிரணுக்களின் எண்ணிக்கையில் ஒரு நாளும் பெருக முடியாது. எல்லா உள்ளுறுப்புக்களிலும் இழையங்களிலும் தேவைக்கு மேற்பட்ட செயற்படும் உயிரணுக்கள் அதிக மாகவே உள்ளன. இந்த அபரிமிதமான நிலை என்றும் குறையா திருக்கும் திடமான போக்கையும் அங்குக் காணலாம். கல் லீரலின் ஒரு பெரும் பகுதியை நீக்கிவிட்டால் அல்லது அப் பகுதி கெட்டுப்போனல், நன்னிலையிலிருக்கும் எஞ்சியுள்ள உயிரணுக்கள் தம்மினத்தைப் பெருக்கிக்கொண்டு இழப்பை ஈடு செய்துகொள்ளும். ஒரு சிறு நீரகத்தை அகற்றிவிட்டால், மற்ருெரு சிறு நீரகம் பெருக்கம் அடைந்துவிடும். ஆயினும், நாம்பின் உயிரணுக்கள் கெட்டுப்போனுல் அது கிரந்தாமான இழப்பே. ஆனல்கெட்டுப்போனவற்றின் ஒருசில செயல்கண் எஞ்சியிருப்பவை மேற்கொள்ளக் கூடும். ஒழுங்குபடுத்தல் மானிட முளேக்கருவில் பல்வேறு உறுப்புக்கள் வளர்ச்சி யுறுங்கால் உயிரணுப் பெருக்கம், உயிரணுப் பிரிவு ஆகியவற் றைத் தவிர வேருெரு கிரியையும் நடைபெறுகின்றது. இதனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/18&oldid=865973" இலிருந்து மீள்விக்கப்பட்டது