பக்கம்:மானிட உடல்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் இனப் பெருக்க மண்டலம் 177 உட்புறத்தில் சளியைச் சுரக்கும் பல சுரப்பிகள் இருக்கின்றன; அவை வாயிலின் துவாாத்திற்கு ஒரு சளி அடைப்பைத் தருகின்றன. விாகறியும் பருவத்தில் சூற்பையில் சுரக்கும் எஸ்ட்ரோ ஜென் பெண் பாலறி - கு மிகளாகிய கொங்கைப் பெருக்கம், அக்குளில் உரோமத் தோற்றம், பெண் குறியில் உரோமத் தோற்றம், பெண் குறியின் வெளிப்புறப் பெருக்கம் போன்ற வற்றை உண்டாக்கும்பொழுது, அது கருப்பையையும் தாக்கு கிறது. கருப்பையின் தசையும் எண்டோமெட்ரியமும் அதிகக் கனமாகின்றன; சூற்பைகளின் செயல்கள்போன்ற எண்டோ மெட்ரிய வட்ட மாற்றங்களும் தொடங்குகின்றன. மாதவிடாய் வட்டத்தின் முதற் பாதியில் கரு அணு வளர்ச்சியுறுங்கால், எஸ்ட்ரோஜெனின் ஆட்சியின் கீழ் எண்டோமெட்ரியமும் வளர்கின்றது. அந்த வட்டத்தின் பிற்பகுதியில் கருஅணு கருக்குழலின் கீழ் நகர்ந்த கருப் பைக்கு வருகின்றது ; சூற்பையி அலுள்ள வெடித்த உறை, அஃதாவது கார்ப்பஸ் லூட்டியம், புரொஜெஸ்ட்ரோனேக் சுரக்கின்றது. இந்த ஹார்மோன் எண்டேமெட்ரியத்தின் தன்மையை மாற்றி கருஅணு அதில் பதிவதற்கேற்றவாறு செளகரிய மாக்குகின்றது. எண்டோமெட்ரியத்திலுள்ள சுரப்பிகள் நீளமாகவும் திருகல் முறுகலாகவும் மாறுகின்றன; அவற்றில் ஊறும் சாறும் கண்ணுக்குப்புலனுகின்றது. தாங்கி கிற்கும் இழையமும் நெகிழ்வாகவும் ஈரமாகவும் ஆகின்றது. பல குருதிக் குழல்கள். தோன்றுகின்றன. கருஅணு கருவுரு விடில், அது மரிக்கின்றது. அதன் பிறகு கார்ப்பஸ் லூட்டி யம் பழைய நிலைக்குக் திரும்புகிறது ; பாமரிப்புக்கேற்ற புரோஜெஸ்ட்ரான் இல்லாமையால், எண்டோமெட்ரியம் சிதைந்த குருதியொழுக்குடன் உட்புறத் தோல் கழன்று போகின்றது. இக் குருதியொழுக்கு பல நாட்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது. இதுதான் மாதவிடாய்க் காலம் என்று வழங்கி வருகிறது. மற்ருெரு முட்டை முதிர்ச்சியடையும் பொழுது எண்டோமெட்ரியம் சீரடைந்து இந்த முழு வட்ட மும் கிரும்ப நடைபெறுகின்றது. t{}ff o £2.« 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/215&oldid=866049" இலிருந்து மீள்விக்கப்பட்டது