பக்கம்:மானிட உடல்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு தி யோட்ட மண்டல ம் இம்மண்டலத்தின் செயல் குருதியோட்ட மண்டலத்தில் இதயம், பாய்குழல்கள், வடிகுழல்கள், நண்புழைகள் ஆகிய உள்ளுறுப்புக்களும் பிற பகுதிகளும் அடங்கியுள்ளன. உடலிலுள்ள எல்லா உயிரணுக் களும் இந்த மண்டலத்தின் துணைகொண்டுதான் இன்றியமை யாக பொருள்களாகிய உயிரியம், செரித்த சத்துப்பொருள்கள் ஆகியவற்றைப் பெறுகின்றன ; தம்மிடமுள்ள கரியமிலவாயு போன்ற கழிவுப் பொருள்களையும் அகற்றுகின்றன. உடல் முழுவதும் செவ்வனே இயங்குவதற்கு குருதியோட்ட மண் டலம் மிகவும் முக்கியமானது. எடுக்அக்காட்டாக, குருதி யோட்டத்தில் பாய்ச்சப்பெறும் ஹார்மோன்கள் என்ற பொருள்கள் வலைக்கண்கள் போன்றுள்ள டாய் குழல்கள், நுண்புழைகள் ஆகியவற்றின் துணைகொண்டு எல்லா உயி ானுக்களுக்கும் கொண்டுபோகப் பெறுகின்றன. எனினும், இந்தக் குருதியோட்ட மண்டலம் நரம்பு மண்டலத்தாலும் எண்டோகிரீன் மண்டலத்தாலும் ஒழுங்குபடுத்தப்பெறுகின் றது. சிறுநீரகம், நுரையீரல், மூளை போன்ற உள்ளுறுப்புக் களுக்குக் தீங்கு நேரிடுங்கால் இம்மண்டலம் மிகவும் பாதிக் கப்பெறுகின்றது. இரண்டு மண்டலங்கள் உண்மையாகப் பார்த்தால் இாண்டு குருதியோட்ட மண் டலங்கள் உள்ளன ; அவை பெரு மண்டலம் சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/23&oldid=866080" இலிருந்து மீள்விக்கப்பட்டது