பக்கம்:மானிட உடல்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 மானிட உடல் தொடங்கிவிடும் ; குழந்தைக்கு ஆறு வாசத்திலிருந்து எட்டு வாசம் முடிவதற்குள்ளேயே இது நடைபெறத் தொடங்கி விடும். குழந்தை பால் குடிக்கும்பொழுது தாம் கருவுற இய லாது என்று பல பெண்கள் நம்புகின்றனர் ; ஆனல், இக் கருத்து தவறு என்பது அடிக்கடி நிலைநாட்டப் பெற்றிருக் கின்றது. தொடர்ந்தாற்போல் குழந்தைக்குத் தாய் பாலூட் டினுல், பிரசவித்த ஆறு மாதத்திலிருந்து ஒன்றாையாண்டிற் குள் எப்பொழுதாவது மாதவிடாய் ஒழுக்கு தொடங்கலாம். கிட்டதட்ட பிரசவம் தொடங்கும்பொழுதே கொங்கை களில் பாலுண்டாதலும் தொடங்குகின்றது. முதலில் ஒரு சில நாட்களில் மட்டிலும் சீம்பால் எனப்படும் மெல்லிய மஞ் சள் நிறமுள்ள பாய்மம் தோன்றும். ஆங்கிலத்தில் அதனே * கொலஸ்ட்ாம் என்று வழங்குவர். அதில் சிறிதளவுகூட ஊட்டம் கொடுக்கும் சத்துப்பொருள் இல்லை ; அதில் முக் கியமாக பிசிதமும் உப்புக்களும் இருக்கின்றன ; அதில் சிறி தும் கொழுப்புப் பொருள் இல்லை. பிரசவத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகுதான் பால் உற்பத்தி யாகத் தொடங்குகிறது. பிரசவ காலத்தின்பொழுது பால் சுரப்பிகள் வளர்ச்சி பெறுவதற்கு சூற்பைகளில் உண்டாகும் எஸ்ட்ரோஜென் தேவைப்படுகிறது ; ஆனால், பால் சுரப்பதை அது தொடங்கி வைப்பதில்லை. உண்மையில், அடித் தலைச் சுரப்பி விடுவிக்கும் லாக்டோஜெனிக் ஹார்மோனை அது தடைப்படுத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே, குழந்தை பிரசவத்துடன் எஸ்ட்ரோஜென் உற்பத்தி குறையத் தொடங்கினல் லாக்டோஜென் என்ற பால் உற்பத் தியைத் தாண்டும் அடித்தலைச்சுரப்பியின் ஹார்மோன் ஆற்ற லுள்ளதாகின்றது. தாய்ப்பால் உயர்ந்த ஊட்டச் சத்தினைப் பெற்றுள்ளது. பெரும்பாலான மருத்துவர்கள் இயன்றவரை தாய் குழந்தைக்குப் பாலூட்டுவதையே அதிகமாக ஆதரிக் கின்றனர்.

  • colostrum.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/234&oldid=866089" இலிருந்து மீள்விக்கப்பட்டது