பக்கம்:மானிட உடல்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மானிட உடல் மண்டலம் ' என்று வழங்கப்பெறுகின்றன. சிறு குருதி மண் டலத்தில் இதயம், நுரையீரல்கள் ஆகிய உள்ளுறுப்புக்களும் அவற்றை ஒன்ருேடொன்று இயைபுபடுத்தும் குழல்களும் அடங்கும். இதயமும் உடலிலுள்ள ஏனைய பகுதிகளுக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழல்களும் சேர்ந்த பகுதி பெருங் குருதி மண்டலமாகும். இந்த இரண்டு மண்டலங் களுக்குமிடையே தெளிவான வேற்றுமைகள் காணப்பெறு கின்றன ; ஆனல், இாண்டிலும் இதயம்தான் முக்கியமாக இயக்கும் உள்ளுறுப்பாகும். இதய உறை இதயம் மார்பின் நடுவில் இடப்புறத்தில் அமைந்துள் ளது. (புகைப்படம் - கூ-ஐப் பார்க்க). அது இரட்டை அடுக் குள்ள மெல்லிய இதய உறை எனப்படும் பையினுள் அமைக் திருக்கின்றது. ஒர் அடுக்கு இதயத்தை யொட்டி மூடிக் கொண்டுள்ளது; மற்ருேர் அடுக்கு அதைச் சுற்றித் தொய்ந்த நிலையிலுள்ளது. வழுவழுப்பான இந்த இரண்டு அடுக்கு களுக்கிடையிலுள்ள இழையப் பாய்மம் இதயத் துடிப்பு உாாய்வின்றி நடைபெறுவதற்குத் துணையாகவுள்ளது. இதயம் : உடற்கூற்றின் அடிப்படையிலும் இயக்க நிலையிலும் இதயம் தனி அலகாக இருப்பினும், அதனே வலப்புற இதயம் , இடப்புற இதயம் என இரண்டு பம்புகளாகவே கருதலாம் (புகைப்படம் உ, கூ-களேப் பார்க்க.) பொதுவாக இந்த இரண்டு பகுதிகளும் நுரையீரல் வழியாகத் தொடர்பு கொண்டுள்ளன. வலப்புற இதயம் உடல் முழுவ திலுமுள்ள வடிகுழல்களின் மூலம் குருதியைப் பெற்று, சிறு குருதியோட்டத்தின் மூலம் அதனை நுரையீரலுக்குள் கொண்டுசெலுத்துகின்றது. நுரையீரலில் அந்தக் குருதி உயிரியத்தை உறிஞ்சுகிறது ; அஃதாவது, உயிரியத்தைப் பெறுகின்றது. பிறகு அக் குருதி இடப்புற இதயத்தை அடைகின்றது. அங்கிருந்து உயிரியத்தைக் கொண்ட குருதி பெருநாடி என வழங்கும் ஒரு பெரிய பாய்குழலுக்குள் செலுத்தப்பெறுகின்றது. இப் பெரும் பாய்குழல் அக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/24&oldid=866101" இலிருந்து மீள்விக்கப்பட்டது