பக்கம்:மானிட உடல்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியோட்ட மண்டலம் 19 இதயம் சந்த இயக்கமுள்ள ஒர் அடிப்படை ஒழுங் கில் அமைந்திருக்கும்போது, அது வேகமாகவோ மெது வாகவோ அடித்துக்கொள்வது - அஃதாவது, நாடித் துடிப்பு - காம்புக் கட்டுப்பாட்டிலும் வேதியற் கட்டுப்பாட்டி லும் அடங்கியிருக்கிறது. மாங்காய்ச் சுரப்பிச். சாறு (எபைன்பிாைன்) குருதியில் பாய்ந்ததும் அது இதயக் துடிப்பைவேகமாக்குகின்றது. இதயநரம்பின் கிளர்ச்சிஅதன் வேகத்தைக் குறைக்கின்றது. வலப்புற ஊற்றறையில் புகும் குருதியின் அளவு அதிகரிக்கும்போது இதயத் துடிப்பு விரைவாக இருக்கும். புரிசைச் சுரப்பி அதிகச் சுறுசுறுப்பாக இயங்கினல் அல்லது புரிசைச் சுரப்பிச் சாறு (தைாாக்ஸைன்) குருதியில் அதிகமர்க்ப் பாய்ந்தால் அது இதயத் துடிப் பைத் துரிதப்படுத்தும். இதயம் இயங்கும் முறை மனிதன் தன் கூர்த்த மதியால் கண்டறிந்த பம்புகள் எல்லாவற்றையும்விட இதயம் மிகத் திறனுடனும் நுட்பமாக வும் கிதானத்துடன் இயங்கும் பம்பு ஆகும். அது அடியிற் கண்டவாறு இயங்குகின்றது. உடல் முழுவதிலுமுள்ள குருதி இரு பெரிய வடிகுழல்கள் மூலம் இதயத்திற்குத் திரும்பவும் வருகிறது. இந்த இரண்டு வடிகுழல்களும் கீழ்ப்பெரு வடி குழல் என்றும் மேற்பெரு வடிகுழல் என்றும் வழங்கப்பெறு கின்றன. (புகைப்படம் - உ-ஐப் பார்க்க.) கீழ்ப்பெரு வடி குழல் உடலின் கீழ்கோடிப் பகுதிகள், வயிறு, மார்புப் பகுதி கள் ஆகியவற்றிலுள்ள குருதியைத் திரட்டி அனுப்புகிறது. மேற்பெரு வடிகுழல் உடலின் மேற்கோடிப் பகுதிகளிலும் தலையிலும் உள்ள குருதியைச் சேர்த்து அனுப்பிவைக் கிறது. ஒவ்வொரு பெரு வடிகுழலும் தான் கொண்டுவரும் குருதியை இதயத்தின் வலப்புற ஊற்றறையில் கொட்டு கின்றது. இடப்புற ஊற்றறையும் வலப்புற ஊற்றறையும் சற்று மெல்லிய சுவர்களைக் கொண்டிருப்பதால், அவற்றின் தசைப் பண்பு உள்ளே வரும் குருதியளவுக்கேற்றவாறு இசைந்து கொடுக்கிறது. இதயத் தசைகள் விரியுங்கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/27&oldid=866165" இலிருந்து மீள்விக்கப்பட்டது