பக்கம்:மானிட உடல்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 மானிட உடல் நிலைநிறுத்தி, கண் இமைகள் மூடிக்கொண்ட பிறகும் கருமை யான, வெண்மையான சாயல்களைப் பார்க்கக் கூடும் ; ஆனல், அவை விரைவில் நிறம் மங்கி மறைகின்றன. விழித்திசையில் கூம்புகள், கோல்கள் எனப்படும் பிரத்தி யேகமான உயிரணுக்கள் உள்ளன ; உடலின் வேறெந்தப் பகுதியிலும் அத்தகைய அணுக்கள் இல்லை. அவை யாவும் புகுவாய் எனப்படும் நரம்புறுப்புக்கள். கோல்கள் விம்பத் திற்கு ஒளிர்வை தருகின்றன; கூம்புகள் அதற்கு நிறத்தைக் தருகின்றன. கட்புலப்படாத்தின் (வீதிக்கிரை) பின்புறம் கோல்களும் கூம்புகளும் கூடல்வாயின் மூலம் நரம்பு முடிச் சனுக்களுடன் சேர்கின்றன. இவ் வனுக்களின் காப்ப விழுது கள் கண்ணைச் சுற்றிலும் பாவிப் பார்வை நாம்பாக மாறு கின்றது. பார்வை நாம்பின் மூலம் உட்துடிப்புக்கள் மூளைக் குக் கடத்திச் செல்லப்படுகின்றன. ஒளி நரம்புக் தடிப்புக்களாக மாற்றப்படுவதும் நரம்புத் துடிப்புக்கள் ஒரு படமாக மாறுவதும் கொள்கையளவில் தான் உள்ளன. ஒரு பகுதி மட்டிலும் தெளிவாக உள்ளது. கண் செச்சை எனப்படும் ஒரு சிவப்பு நிறமி கோல்களில் உள்ளது. இந்த நிறமியின்மீது படும் ஒளி அதனைச் சிதையச் செய்கின்றது; சிதைவின் விளைவாக வெளிப்படும் பொருள்கள் நாம்புகளைத் தூண்டுகின்றன. கண்ணில் இந்த நிறமியின் அளவு அதிகமாக இருப்பதற் கேற்றவாறு இருட்டில் நாம் அதிகமான பார்வையைப் பெறுகின்ருேம். கண் செச்சை மீண்டும் உண்டாக்கப் பெறுகின்றன ; இல்லாவிட்டால் நாம் தொடர்ந்து பார்க்க இயலாது. எனினும், நாம் சூரியனே நேரில் பார்ப்பதுபோன்ற அதிகமான ஒளியில் கோல்களைப் படுமாறு செய்தால் அவற்றிற்குத் தீங்கு நேரிடுகின்றது. அடிக்கடி இவ்வாறு நேரிட்டால், கண்ணில் கிரந்தரமான பார்வைக் குறைவை உண்டுபண்ணும் புள்ளிகள் ஏற்பட்டு விடுகின்றன. கட்புலப்படாத்தின் நடுவில்தான் நிறப்பார்வை மிக நன்ருக இருக்கின்றது ; அந்தப் புள்ளிதான் நாம் நேரடியாகப் பார்க்கும் பொருளின் விம்பத்தை ஏற்றுக்கொள்ளும் இடமா கும். கட்புலப்படாத்தின் ஒரத்தில் (விளிம்பில்) கோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/272&oldid=866171" இலிருந்து மீள்விக்கப்பட்டது