பக்கம்:மானிட உடல்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 மானிட உடல் படம் 78 எலும்பின் குறுக்கு வெட்டுத் தோற்றம். (தொடை எலும்பு.) (படம்-78). அடர்த்தியான புறணி எலும்பின் அளவும் கடற் பஞ்சு போன்ற உள்ளெலும்பின் அளவும் பெரிய அளவில் வேறுபடுகின்றன. அதிக வலிவை வேண்டியுள்ள எலும்புகள் மிகப் பளுவான புறணியைப் பெற்றிருக்கின்றன. புறணி ஒர் உறுதியான நார்போன்ற பெரியோஸ்டியம் என்ற உறையால் போர்த்தப் பெற்றுள்ளது. இதனுடன் தசையின் தசை நாண்களும் மூட்டுக்களின் தசைக் கட்டுக் களும் (பந்தகம்) பொருத்தப் பெற்றிருக்கின்றன. எலும்பின் புறணி யானேத் தந்தம் போன்று கெட்டியான உறுதிப்பாட்டுடன் தோற்றமளித்தபோதிலும், அது பல குருதிக் குழல்களைக்கொண்ட உயிருடனிருக்கும் ஓர் இழைய மாகும். பெரியோஸ்டியத்தில் பாய்குழல்கள் எண்ணற்றவை உள்ளன ; அவை எலும்பின் புறணியை ஊட்டந்தரும் ஒன்று அல்லது பல குழல்களாக ஊடுருவிச் செல்லுகின்றன. மேற் பார்வைக்குக் கெட்டியாகவும் உறுதியாகவும் தோற்றம் அளிக் கும் எலும்பு இழையத்தில் ஹேவர்சியன் வாய்க்கால்கள்: எனப்படும் பல கிளேக் குழல்களாக ஊடுருவிச் செல்லு கின்றன ; இக் குழல்களின் வழியாக குருதிக் குழல்கள் புறணியின் எல்லாப் பகுதியையும் அடைந்து நடுவிலுள்ள மச்சை யுறையையும் அடைதல் கூடும். வடிகுழல்களும் எண் ணற்றவை உள்ளன ; அவை பாய்குழல்களேவிட எண்ணிக் கையில் அதிகமானவை. மண்டையோட்டைப் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/290&oldid=866211" இலிருந்து மீள்விக்கப்பட்டது