பக்கம்:மானிட உடல்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் உடம்பார் அழியில் உயிரார் அழிவர் ; கிடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் ; உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே, உடம்பினே முன்னம் இழுக்கென்று இருந்தேன் ; உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் ; உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று உடம்பினை யானிருந்து ஒம்புகின் றேனே. -திருமூலர் இது அறிவியல் யுகம். ஆராய்ச்சிகளால் பல உண்மை கள் கண்டறியப்பெறும் காலம். இந்த உண்மைகளால் உடல் பற்றிய தத்துவங்களும் கருத்துக்களும் மாறிக் கொண்டே வருகின்றன. எனவே, மானிட உடலைப் பற்றிய நம் அறிவு விரிந்துகொண்டே வருகிறது. அவற்றை யெல்லாம் சாதாரண மக்கள் அறிந்துகொள்வ தென்பது எளிதன்று. அவை யாவும் அவர்கட்கு விளக்கம் தருவதை விட, குழப்பத்தில்தான் கொண்டுசெலுத்தும். சாதாரண மக்கள் தம் உடல் எவ்வாறு இயங்கி வருகிறது என்பதைப் பற்றிப் பொதுவாக அறிந்துகொண்டால் போதுமானது. அகற்கு இந்நூல் பெருங் துணைபுரியும். நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் எடித் இ. ஸ்ப்ரெளல் என்ற அம்மையார் “The Science Book of Human Body ?” argårp grão எழுதியுள்ளார். அம்மையார் ஒர் ஆய்வாளர் , ஆசிரியர் ; மருத்துவர். எனவே, அவர் அறிவு வளர்ச்சியினை யொட்டி யும் அனுபவத்தை யொட்டியும் மானிட உடலேப் பற்றிய பல கருத்துக்களைத் தெளிவாக விளக்கியுள்ளார். அதன் தமிழாக்கமே இந்நூல். இந்நூலிலுள்ள பல்வேறு படங்கள், படிப்பவர், பொருளை நன்கு விளங்கிக்கொள்ளப் பெருங் துணைபுரியும். புத்தகத்தைப் படிப்பவர்கள் இதை நன்கு உணர்வார்கள். சாதாரண மக்கள் உடலைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டியவற்றை யெல்லாம் மிக நல்ல முறையில் எடுத்தோதியுள்ளார் மூல ஆசிரியர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/3&oldid=866233" இலிருந்து மீள்விக்கப்பட்டது