பக்கம்:மானிட உடல்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச்சொற்கள் (விளக்கக் குறிப்பு) 299 மானேசைட்டிஸ் (monocytes). ஒரு வகை வெள்ளைநிறக் குருதியணுக்கள். மாஸ்டு உயிரணுக்கள் (mast cells). ஒரு வகை இழையங் கள். அவற்றில் பேலோபைல்ஸ் என்ற அணுக்கள் உள்ளன. மிட்ரல் வால்வு (mitral value). இதயத்தில் இடப்புற ஊற். றறைக்கும் ஏற்றறைக்கும் இடையிலுள்ள வால்வு. மின்னுற்பகுதிரவங்கள் (electrolytes). உருகிய நிலையில் அல்லது கரைசல் நிலையில் இருந்துகொண்டு அயனிகளின் மாற்றத்தால் மின்னுற்றலைச் செலுத்தும் பொருள்கள். மின்சார கார்டியோகிராம் (electro cardiogram).இதயத்தில் பாவும் துடிப்பைப் பதிவு செய்வதற்கு உதவும் நுண்ணியகருவி. @pairs off (aqueous humour). & Gorgoffer Gpcir ués அறையிலுள்ள நீர்ப்பொருள். மூட்டுச்சுரப்புப் பாய்மம் (synovial fluid). எளிதாக அசையக்கூடிய மூட்டுக்களின் இடைவெளியிலுள்ள திரவம். மெகாகார்யோசைட்டிஸ் (megakaryocytes). எலும்பு மச்சையிலுள்ள இராக்கத (பெரிய) அணுக்கள். குருதியோட் டத்தில் அவை மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ளன. Gloursivsarifsir = $12_1_sô (Meissner’s corpuscle)தொடும் உணர்ச்சியைத் தெரிவிக்கும் மிகச்சிறிய நரம்பு நார்கள். மெலானின் (melanin). பொடி நிறமுள்ள ஒரு நிறமி. தோலுக்கு கிறத்தைத் தருவது. மேல்-தோலின் அடியிலுள்ள பிரத்தியேகமான அணுக்களில் உற்பத்தியாகிறது. மேலிடம் (higher centre). அனைத்தையும் பாகுபாடுசெய்து அறியும் பெருமூளையிலுள்ள இடம். மைடாஸிஸ் (mitosis). உயிரணுக்கள் பிரிந்து செல்லும் செயல். மைலின் (myelin) காப்ப அணுக்களின் விழுதுகளில் கவசம் போல் சூழ்ந்திருக்கும் ஒருவகைக் கொழுப்புப் பொருள். யோனி லிங்கம் (clitoris). பெண்குறியில் யோனிக்குழலில் துருத்திக்கொண்டிருக்கும் ஆண்குறியை யொத்த ஒர் உறுப்பு. ரபினி அணு உடலிகள் (Rufini corpuscles), சூட்டு உணர்ச் சியை அறிவிக்கும் காம்புப் பகுதிகள். ரிக்கெட்ஸ் (rickets). விட்டமின் D-இல்லாக் காரணத்தால் குழவிப் பருவத்திலும் இளம் பருவத்திலும் ஏற்படும் நோய். இதல்ை எலும்புகள் வளைந்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/337&oldid=866314" இலிருந்து மீள்விக்கப்பட்டது