பக்கம்:மானிட உடல்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச்சொற்கள் (விளக்கக் குறிப்பு) 30 fo வளர்சிதை மாற்றம் (metabolism). உயிரிழையம் வளர்வதற் கும், ஆற்றல் உண்டாவதற்கும், உயிரணுக்கள் சிறிய பொருள்க ளாகச் சிதைந்து பயன்படுவதற்கும் அல்லது வெளியேற்றப்படு வதற்கும் உடல் உணவை உபயோகப்படுத்தும் செயல். வளர்மாற்றம் (anabolism), உயிருள்ள பொருள் சடத்தை ஏற்று, தன்வயமாக்கி அதை வேதியல் மாற்றம் செய்தல். விரகறியும் பருவம் (puberty). மானிட இனப்பெருக்க உறுப்புக் கள் செயற்படும் பருவம். வெருட்சித்துலங்கல் (alarm reaction). மாங்காய்ச்சுரப்பி' யின் அகணியில் உண்டாகும் ஹார்மோன் உடலை வெருண் டெழுவதற்கோ அல்லது வெருவியோடுவதற்கோ ஆயத்தம் செய்கிறது என்று டாக்டர் கானன் என்பார் கூறினர். மருத்துவயியலில் இச்செயல் இப்பெயர் பெறும். வெஸ்டி ஜியல் வால் (vestigial tail). குதத்தின் முனைப்பகுதி. ஹார்மோன் (hormone). சில உறுப்புக்களில் உற்பத்தியாகும் வேதியற்பொருள்கள். இவை குருதியால் உறிஞ்சப்பெற்றதும், அவை சாம் உண்டாகும் உறுப்புக்களைத் தவிர வேறு உறுப்புக் களின் செயலேயும் இழையங்களின் செயலையும் பாதிக்கும். ஹெபாரின் (heparin). குருதியுறைதலைத் தடுத்து நிறுத்தும் பொருள் ; கல்லீரலில் உண்டாகி, அங்கு சேமிக்கப்பெறுவது. G@ vsui Puusör Ersbouruů 3,6ir (Haversian canals). Greyth பின் கடினமான பகுதியைத் துளைத்துச் செல்லும் குழல்கள் ; இவற்றின் மூலம்தான் குருதிக்குழல்கள் புறணியின் எல்லாப் பகுதிகளை அடைவதுடன் மச்சையறையையும் அடைகிறது. ஹைட்ரோகார்ட்டிஸோன் (hydrocortisone). மாங்காய்ச் சுரப்பியில் ஊறும் ஒருவகை ஹார்மோன். ஹைப்போ தாலமஸ் (hypothalamus). நாம்பு மண்டலத் தின் ஒரு பகுதி. ஸ்டெராய்டுகள் (steroids). ஒரு வகை உயிரினக் கூட்டுப் பொருள்கள். ஸ்டெரால் (sterol). ஒரு வகைக் கொழுப்புப் பொருள். ஸ்பைகுயூல்கள் (spicules). எலும்பின் உட்பகுதிகள். (எ-டு.) மச்சை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/339&oldid=866318" இலிருந்து மீள்விக்கப்பட்டது