பக்கம்:மானிட உடல்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியோட்ட மண்டலம் 31 அமுக்கம் பின்னும் குறைகின்றது. ஒரு நுண்புழையிலும் அதன் ஒற்றை உயிரணுச் சுவரிலும் உள்ள அமுக்கம் குறைந்துபோவதால், உயிரியம் போன்ற பொருள்கள் நுண் புழையிலிருந்து அதனைச் சூழ்ந்துள்ள இழையத்திற்குச் செல்லக் கூடும். இறுதியாக, நுண்புழை வழியிலுள்ள இழை யங்களின் அமுக்கத்தால் உயிரணுவாலான வளர்ச்சிதை மாற் றத்திலுள்ள சில கழிவுப்பொருள்கள் குருதியினுள் செலுத் தப்பெறுகின்றன. ஒன்று சேரும் நண்புழைகளில் இப் பொழுது உயிரியம் இல்லாத குருதி செல்லுகின்றது. இந்த நுண்புழைகள் ஒன்றுசேர்ந்து சிறு நாளங்களாகின்றன ; சிறு நாளங்கள் முறையே வடிகுழல்களாகின்றன. உடலெங்குமுள்ள கசைகளினுள் படிந்துள்ள வடிகுழல் கள் அத்தசைகளின் சுருக்கத்தாலும் விரிதலாலும் பாதிக்கப் பெறுகின்றன. காலிலுள்ள வடிகுழல்கள் கால்தசைகள் சுருங் கும்பொழுதெல்லாம் இறுகப் பிழியப்பெறுகின்றன.இவ்வாறு அவை கறக்கப்பெற்று அவற்றிலுள்ள குருதி இதயம் உள்ள பக்கத்தை நோக்கி செலுத்தப் பெறுகின்றது. கால் தசைகள் விரியுங்கால் வடிகுழல்களிலுள்ள குருதி அவற்றின் வழி யெங்குமுள்ள வால்வுகளால் பின்னேக்கிப் பாயாது தடுக்கப் பெறுகின்றது இவ்வாறு நாளக்குருதி பெருவடிகுழல்களே அடைந்து அவற்றின்மூலம் இதயத்தை அடைகின்றது. நிணநீர்க் குழல்கள் நிணநீர்க் குழல்களடங்கிய கிகாற்ற மண்டலம் (படம் 11.) உடலிலுள்ள இழையங்களின் துண்புழைகளுடன் மிக நெருங்கிய உறவுகொண்டுள்ளது. இக் குழல்கள் குருதிக் குழல்கள் அன்று; அவை நிணநீரைக் கொண்டுசெல்லுகின் றன. இப் பாய்மம் நீர்க்குருதி போன்றதொரு பொருளாகும். நுண்புழைகளுடன் நெருக்கமாகவுள்ள நிணநீர்க் குழல்கள் மெல்லிய சுவர்களைக்கொண்ட சிறு குழல்களாகும். அவை ஒன்று சேர்ந்து பெருங் குழல்களாகி, பாய்குழல்கள், வடி குழல்கள் செல்லும் வழியெல்லாம் செல்லுகின்றன. பெரிய நிணநீர்க் குழல்களின் வழியெங்கும் பிரத்தியேகமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/39&oldid=866430" இலிருந்து மீள்விக்கப்பட்டது