பக்கம்:மானிட உடல்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறிய நிணநீர்க் குழலின் குறுக்கு வெட்டுத் தோற்றம். படம் 11. தோலடி இழையத்திலுள்ள கிணநீர் மண்டலம். தன்மையைக்கொண்ட இழையத் தொகுதிகள் உள்ளன : அவை நிணநீர் முண்டுகள் என்று வழங்கப்பெறும். உடலி லுள்ள பெரும்பாலான நிணநீர்க் குழல்கள் ஒகு பெரிய நடுக் குழலாக முடிவடைகின்றன ; இந் நடுக்குழல் மார் கிணத் தாம்பு என்று வழங்கப்பெறும். இக்குழல் முதுகந்தண்டை யொட்டி அமைந்துள்ளது ; அது இதயக்கின் அருகில் பெருவடிகுழல் ஒன்றில் கன்னிடத்துள்ள நிணநீரைக் கொட்டிவிடுகின்றது. நிணநீரின் செயல்கள் வரும் அத்தியா யத்தில் விரிவாக ஆராயப்பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/40&oldid=866435" இலிருந்து மீள்விக்கப்பட்டது