பக்கம்:மானிட உடல்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியும் நிணநீரும் 41 யாக உற்பத்தியாகின்றன. எவ்வளவு காலம் அவை வாழ் கின்றன, எங்கு அவை சிதைகின்றன என்பனபோன்ற விவ ாங்கள் எல்லாம் இன்னும் கண்டறியப்பெறவில்லை. ஒருகால் அவை செயற்படும் குறிப்பிட்ட இடத்தில் அழிதல் கூடும். 'பாலிஸ்’ என்ற அணுக்களுக்குஅடுத்தபடியாகக் குருதி போட்டத்தில் வெள்ளையணுக்களிடம் ஏராளமாகக் காணப் பெறுபவை லிம்போசைட்டிஸ்’ எனப்படும் நிணநீர் அணுக்க ளாகும். அவைகளும் உடலிலுள்ள பெரும்பாலான உறுப்புக் களில் அதிக எண்ணிக்கையில் காணப்பெறுகின்றன. சிறப் பாக அவைகள் நிணநீர் முண்டுகளில் காணப்படும். நிணநீர் இழையங்களிலிருந்து குருதிக்குப் பாயுங்கால் இந்த கிணநீர் முண்டுகளின் வழியாகத்தான் செல்லும். லிம்போசைட்டிஸ் அணுக்கள் ஒருசில முறைகளில் எதிர் உயிரணுக்கள் உண்டா வதில் தொடர்பு கொண்டுள்ளனவாகத் தெரிகின்றது. இந்த எதிரனுக்கள்தாம் நமது உடலுக்கு நோய் வராமலும் தொற்று ஒட்டாமலும் பாதுகாக்கின்றன. அச் சமயங்களில் இந்த நிணநீர் முண்டுகள் சுறுசுறுப்புத் தன்மையை அடைந்து தொற்றுநோய் பரவும் இடத்திலோ அல்லது சிதைவடைந்த இழையம் அகற்றப்பெற வேண்டிய இடத்திலோ பருக்கின் றன. தொண்டைக் கட்டு அல்லது நெஞ்சுக்கட்டு ஏற்படுங் கால் நமது கழுத்தில் நுட்பமான தொண்டைச் சுரப்பிகள்’ விங்கிக்கொண்டு உப்பியிருப்பது நமக்குக் தெரிந்ததே. உண் மையில், அவை வீங்கிக்கொண் டிருக்கும் நிணநீர் முண்டு களே யாகும். மானேசைட்டிஸ் என்ற வகை வெள்ளே அணுக்க ளுடன் லூக்கோசைட்களின் பட்டியல் முடிவடைகின்றது. இந்த மானேசைட்டிஸ் குருதியோட்டக்கில் எந்தவிதமான தெரிந்த செயலையும் புரிவதில்லை ; ஆனல், அவை மாக்ரோ பேஜஸ் என்பவற்றுடன் நெருங்கின உறவு கொண்டவை ; இந்த மாக்ரோபேஜஸ், நிணநீர் முண்டுகள், மண்ணிசல், நிணநீர் சுரக்கும் இடங்கள் ஆகியவற்றில் வளர்ச்சியடையும். இவை உடலின் கிருமி நாசினிகளாகவும் (பேகோசைட் டிஸ்), உடலின் அழுக்குகளே அகற்றுபவைகளாகவும் உதவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/49&oldid=866453" இலிருந்து மீள்விக்கப்பட்டது