பக்கம்:மானிட உடல்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv தாம் கூறுவதற்கு உரிமையுள்ளவர்கள். படிப்பவர்கட்கு எளிய முறையில் பொருளுணர்வு ஏற்பட்ட்ால் அதுவ்ே மொழிபெயர்ப்பின் முதல் வெற்றியாகும். புத்தகத்தின் இறுதியில் இப்புத்தகத்தில் மேற்கொண் டுள்ள கலைச்சொற்களும், முக்கியமான சில கலைச் சொல் குறிக்கும் பொருள் விளக்கமும்,_குறிப்புப் பொருள் அக ராதியும் பின்னிணைப்புக்களாகச் சேர்க்கப் பெற்றுள்ளன. கலைச்சொற்கள் ஆங்கிலத்தில் உடலியலைப்பற்றிப்படிக்கும் கருத்துக்களைத் தமிழில் அமைத்துக்கோடலுக்கும், கலைச் சொற் பொருள் விளக்கம் முதன் முதலாக உடலியலைப் பற்றிப் படிப்பவர்கள் நன்முறையில் பொருளுணர்வு பெறு வதற்கும், குறிப்புப் பொருள் அகராதி பல செய்திகளை அவரவர் விரும்புகிற வண்ணம் தொகுத்தறிவதற்கும் துணை யாக இருக்கும். எனக்குள்ள பல வகையான குறைகளால் மொழி பெயர்ப்பில் எத்தனையோ வழுக்கள் ஏற்பட்டிருத்தல் கூடும். அறிஞர்கள் அவற்றைப் பொறுப்பார்களாக, கலைச்சொற் கள் இன்னும் திருத்தம் பெற வேண்டும் என்பதை நன்கு அறிவேன். அடுத்த பதிப்பில் அவை இன்னும் நன்முறை யில் திருத்தம்பெற்று மேற்கொள்ளப் பெறும். இந்தி என் முயற்சியை நிறைவேற்றி வைத்த எல்லாம்வல்ல இறைவனே மனமொழி மெய்களால் வணங்கி இந்நூலைத் தமிழ்த்தாயின் திருவடியில் சமர்ப்பிக்கின்றேன். தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல், சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல், கண்ணிர்த் துளிவரஉள் ளுருக்குதல், இங்கிவை எல்லாம் யேருளும் தொழில்கள் அன்ருே ? ஒளிவளரும் தமிழ்வாணி அடியனேற்கு இவையனைத்தும் உதவு வாயே.' -பாரதியார் காாைக்குடி இங்கனம், 20–4–258 ந. சுப்பு ரெட்டியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/5&oldid=866455" இலிருந்து மீள்விக்கப்பட்டது