பக்கம்:மானிட உடல்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மானிட உடல் சுவர்கள் பிசிதங்கள் செல்வதற்குத் தடையாக இல்லை : ஆகவே, அவை பிசிதம் குருதிக்குள் கிரும்ப வரும் பிரத்தி யேகக் குழல்களாக அமைகின்றன. நிணநீர் தனித் தனியாகக் கிடக்கும் துணுக்குகளைக் கொண்ட சடப்பொருளேயும் ஏற்றுக்கொள்ளக் கூடும். அடிக் கடி இடைவேளைகளுடன் கிணநீர்க் குழல்கள் நிணநீர் முண்டுகளில் நுழைந்து வெளிப்படுகின்றன ; நிணநீர் முண்டு க்ள் என்பவை பிரத்தியேகமான முறையில் கிர்ண்டுள்ள கிண நீர் இழையங்களே. அவற்றைச் சில சமயம் சுரப்பிகள் ” என்றும் வழங்குவ துண்டு. இங்கு லிம்போசைட்டிஸ், எதிர் அணுக்களைக் கொண்ட உயிரணுக்கள் ஆகியவற்றைத் தவிர துணுக்குகளே விழுங்கித் தொற்றுடன் போராடுவதற்குப் பல பேகோசைட்டிஸ் என்ற அணுக்களும் உள்ளன. துரையீரலின் அருகிலுள்ள கிணநீர் முண்டுகள் கருமை நிறமாக உள்ளன. காரணம், நுரையீரலிலிருந்து வெளிப்படும் நிணநீர் நாம் சுவாசிப்பதன் மூலம் உட்கொள்ளும் நிலக்கரித் தூசுகளைக் கொண்டு செல்லுகின்றன. கைவிால் ஒன்றில் தொற்று நோய் ஏற்பட்டால், அக்குளிலுள்ள கிணநீர் முண்டு கள் உப்பி மிகவும் மிருதுவாதல் கூடும் ; நீணநீர் பாக்டீரி யாவை இந்த இடத்தில் கொண்டுசெலுத்துகிறது. பல வழி களில் கிணநீர் முண்டுகள் பாதுகாப்பாக அமைந்துள்ளன. கினர்ே, இதயத் துடிப்பால் ஏற்படும் முன் - தள்ளும் விசையைப் பெற்றிராததால், நிணநீர்க் குழல்களில் அதன் ஒட்டம் குருதியோட்டத்தைவிட மிகக் குறைந்த வேகத் துடன்தான் செலுத்தப் பெறுகின்றது. தசைச் சுருக்கக் தாலும், சுவாசிப்பதன் அசைவுகளாலும், குறிப்பிட்ட சில பகுதிகளிலுள்ள பாய்மத்தின் அதிகரிப்பாலும் நிணநீர் ஒட் டம் துணை செய்யப்படுகிறது. நிணநீர் ஒட்டத்தில் தடை நேரிட்டால், அது தனது திசையைத் தலைகீழாக மாற்றிக் கொண்டு நிணநீர்க் குழல்களுடன் தொடர்புள்ள வேருெரு வழியில் செல்லுதல் கூடும். இறுதியாக, மிகச் சிக்கலான வலைக்கண்போன்ற அமைப்புடனுள்ள நீணநீர்க் குழல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/58&oldid=866473" இலிருந்து மீள்விக்கப்பட்டது