பக்கம்:மானிட உடல்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மானிட உடல் மூச்சுக் குழல் மேலேயுள்ள காற்று வழி மூடப்பெற்று எதிர்பாராத வகையில் திறக்க வேண்டியுள்ளபொழுது சிறப்பதற்காகவே காற்றுக் குழல் நன்கு தெரியும் நிலையில் அமைந்துள்ளது. இவ்வித அமைப்பு நமக்கு மகிழ்ச்சியைக் கருகிறது. குழந்தையின் குரல்வளை மிகவும் சிறிதாகவுள்ளது; தொற்று ங்ோய் அதனேக் தாக்கினல் எளிதில் மூடிக்கொள்ளக்கூடியது. பெரும்பான்மையான குழந்கைகள் உயிர் பிழைப்பதற்குக் காரணம், இக் காற்றுக் குழல் சரியான முறையில் திறப்பதே என்றுகூடச் சொல்ல வேண்டும். மூச்சுக் குழல் மார்பறையினுள் நுழைந்து இாண்டு முக்கிய மூச்சுக் கிளேக்குழல்களாகப் பிரிந்து ஒன்று வலப்புற துரையீசலுக்கும் மற்ருென்று இடப்புற நுரையீரலுக்குமாகச் செல்லுகின்றன. இவ்வாறு இரு வழியாகப் பிரிந்து செல்லும் நிலை மார்பெலும்பில் இரண்டாவது விலாவெலும்பருகில் ஏற் பட்டிருக்கிறது. இவ்வாறு மூச்சுக் குழல் பிரிந்து செல்லும் இடம் மிகவும் முக்கியமானது. பெருநாடி எனப்படும் உடலின் முக்கிய பாய்குழல் அவ்விட்த்தில் வளைந்து செல்லு கின்றது. உணவு செல்லும் பாதையும் அதன் மிக அருகில் பின்புறமாக அமைந்திருக்கின்றது. துரையீரலிலிருந்து காலி செய்யும் பெரிய நிணநீர் முண்டுகள் அதனைச் சுற்றி வட்டமாக அமைந்துள்ளன. நோயின் காரணமாக இவ் வமைப்புக்களில் ஏதாவது ஒன்று வீங்கிலுைம் அதனல் மற்றவைகளும் இவ்விடத்தில் பாதிக்கப்பெறும். மூச்சுக் குழலும் பிசிர்களுள்ள சளிச் சவ்வில்ை போர்த்தப் பெற்றுள்ளது. இவ்வாறு ஏற்பட்டுள்ள அணைச் சவ்வுகளின் அமைப்பின் முக்கிய வேலை வீடு துப்புரவு செய்யும் வேலையைப் போன்றது : சதா அசைந்துகொண் டிருக்கும் பிசிர்கள் நுண்ணிய தாசுகளே எடுக்கும் காங்க ளாகவும், சுரப்பு நீர்கள் தண்ணிரைக்கொண்டு வாளிகளே வைத்திருக்கும் நீர்ப்படைகளைப்போலவும், பணியாற்று கின்றன ; சளிர்ேச் சுரப்பிகளிலிருந்து வரும் பிசுபிசுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/68&oldid=866494" இலிருந்து மீள்விக்கப்பட்டது