பக்கம்:மானிட உடல்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 மானிட உடல் திருப்பதை விழிப்புடன் கவனித்துக்கொள்வர். கதிர் வீச்சு புகா எண்ணெயைச் சிறிதளவு வாயில் ஊற்றி இருமல் இல்லாதபொழுது எண்ணெய்ப் பொருள் என்ன ஆகிறது என்பதைக் காட்டலாம். இந்த எண்ணெய்ப் பொருள் ஊடுருவுக் கதிர்களால் ஒரு நிழலை உண்டாக்குகிறது. மறு நாள் காலையில் ஊடுருவுக் கதிர்ப்படம் நுரையீரலின் அடிப் பாகங்களில் இந்த எண்ணெய் இருப்பதைக் காட்டும். இருமல் மறிவினை செயற்படா நிலையிலுள்ள தாங்கும் நபரிடம் இந்த எண்ணெய் தங்கு தடையின்றி அடிப்பாகத் திற்குச் செல்லக் கூடும். மூச்சுப் பிரிவுக் குழல் மூச்சுப் பிரிவுக் குழல்கள் (புகைப் படம் எ-ஐப் பார்க்க; படம் 21.) நுரையீரலினுட் சென்று அங்கு ஒரு மாம்போல் விரிவடைகின்றன. பெரிய மூச்சுப் பிரிவுக் குழல்களில் மூச்சுக் குழலிலிருப்பது போலவே குருக்தெலும்பு வளே யங்கள் உள்ளன. சிறிய பிரிவுக் குழல்கள் தசையாலானவை. அத்தசைகளில் நீளுந்தன்மையாகவும், விரிந்து உப்புக் தன்மையாகவும் உள்ள கொல்லேஜன் நார்கள் உள்ளன. சுவா சிக்கும்பொழுது துரையீரல்கள் விரிவதற்கும் சுருங்கு வதற்கும் ஏற்றவாறு அக் கிளேக் குழல்கள் குறுக்களவில் வேறுபடுகின்றன. கோடிகளிலுள்ள சிறிய கிளேக்குழல்கள் பிசக்தியேகமான கவர்ச்சியை யுடையவை. மற்றும், அக் குழல்கள் வேறிடங்களில் உள்ளவற்றைவிடக் கனமான மேலுறையால் போர்த்தப் பெற்று, வழிகளைக் கணிசமானஅள வுக்குக் குறுக்கக் கூடியனவாக உள்ளன. இழுப்பு நோயால் தாக்குண்டவர்களிடம் இவ்வழிகள் குறுகியிருக்கும். அவ ரிடம் இந்தச் தசைகளில் நரம்புப் பிடிப்பு ஏற்பட்டு அது அலெர்ஜி எதிர் வினையாக வெளிப்படும். இக் குறுகிய பிரிவுக் குழல்களில் காற்று சிரமத்துடன் ஒலித்துக் கொண்டு வெளிவருவதைக் கேட்கலாம். இன்னும் தசையாலான சிறிய மூச்சுப் பிரிவுக்குழல் கள் தூசுகளையும் கிருமிகளையும் அதிகப்படியான சளியையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/70&oldid=866500" இலிருந்து மீள்விக்கப்பட்டது