பக்கம்:மானிட உடல்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பொது க் குறிப் புக்கள் பன்னெடுங் காலமாகவே மனித அறிவு விரிந்து கொண்டே வருகிறது. ஆராய்ச்சி மனம்படைத்த மக்கள் பல துறைகளைப்பற்றி இன்று மனநிறைவு பெறக்கூடிய அளவுக்குச் செய்திகளே அறிந்துள்ளனர். ஒரு காலத்தில் தனிப்பட்ட ஒரு சில நிபுணர்கட்கே உரியது என்று கருதப் பெற்றி அறிவியற் கலைகள்பற்றிய ஆராய்ச்சியினை இன்று பாமா மக்களும் அறிந்து சுவைக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக் கின்றது. உடலைப்பற்றிய அறிவு ஆனல், பலர் இன்னும் நம்முடைய உடலைப்பற்றியே சரியாக அறிந்துகொள்ளவில்லை ; அதன் பல்வேறு அமைப்பு களப்பற்றியும் அதன் பல்வேறு பகுதிகள் எவ்வாறு ஒரு சேர இணைந்து இயங்குகின்றன என்பதைப்பற்றியும் இன் லும் புரிந்துகொள்ளவில்லை. ஒருவருக்குக் தம்முடைய மோட்டார் எவ்வாறு இயங்குகிறது என்பது நன்கு தெரியும்; ஆல்ை, தம்முடைய கல்வீசலின் இருப்பிடமோ அது இயங்கும் முறையோ அவருக்குத் தெரியாது. ஒருசிலருக்கு உடலைப் பகுத்துப்பார்க்கும் முறையே பிடிப்பதில்லை. இன்னும் சிலர் உடற்கூற்று இயல், உடலியல் ஆகியவற்றைப் பற்றித் தெளிவ்ாக அறிந்துகொள்வது அவற்றை ஆழ்ந்து பயின்ற தனிப்பட்ட மாளுக்கர்கட்கே இயலும் என்று கருது கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/9&oldid=866538" இலிருந்து மீள்விக்கப்பட்டது