பக்கம்:மானிட உடல்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சுறுப்பு மண்டலம் 71 ளளவும் அதிகமாக இருக்கும். சற்று வயது முதிர்ந்தவ ரிடம் முதுகங்கண்டு வளைந்தும் விலாவெலும்புக் கூடு சற்று உயர்ந்தும் இருக்கும் ; இதல்ை மார்பு பெரிதாக இருக்கும் ; நுரையீரல் இழையங்களின் நீண்டு சுருங்கும் தன்மையும் குறைந்து காணப்பெறும். துரையீரல்கள் அதிகமாக விரிந்த கிலையில் இருக்கும் ; எஞ்சியிருக்கும் காற்றின் அளவும் அதிகமாகும் , அதன் உண்மையான கொள்ளளவு குறைந்து விடும். நுரையீரலின் முக்கிய செயல் நுரையீரலின் இறுதியான செயல் குருதிக்கு உயிரியக் தைத் தருவதே. குருதி நுரையீசல் நுண்புழைகளில் ஒடும் பொழுது அதற்கு உயிரியத்தைத் தந்து அகிலிருந்து அதிக மான கரியமில வாயுவை அகற்றி, காற்றுடன் வெளியே தள்ளுகிறது. இந்த இரண்டு-முறைப் பரிமாற்றம் எந்த உயிரணுக்களின் செயலாலும் கட்டுப்படுத்தப் பெறுவதில்லை. காற்றறைகளிலுள்ள பல்வேறு வாயுக்களின் அழுத்தத்திற் கும் காற்றறைச் சுவர்களிலுள்ள குருதியின் அழுத்தத்திற் கும் உள்ள வேற்றுமையின் காரணமாக அது நடைபெறு கின்றது. காற்று உள்ளிழுக்கப்பெற்றதும் அதிலுள்ள உயி ரியத்தின் அமுக்கம் நுரையீசல் நுண்புழைக் குருதியிலுள்ள அமுக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது. காரணம், உறுப் புக்களெங்கும் சென்று திரும்பிய குருதியிலுள்ள உயிரியம் முழுவதும் உபயோகப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே, குறைந்த அழுத்தமுள்ள திசையை நோக்கி உயிரியம் குருதி யினுள் பாவுகிறது. ஆனல், இதற்கு நேர்மாருக நுரையீாலி அள்ள குருதியிலிருக்கும் கரியமிலவாயுவின் அழுத்தம் தாய்மையான புதிய காற்றிலுள்ள அழுத்தத்தைவிட அதிக மாகவுள்ளது. இதன் காரணமாக அவ்வாயு குறைந்த அழுத்த முள்ள இடத்தை நோக்கி, அஃதாவது குருதியிலிருந்து காற்றறைகளிலிருக்கும் காற்றை நோக்கிப் பாவுகிறது. எதா வது விபரீதமுள்ள வாயு சுவாசிக்கும் காற்றிலிருக்க நேரிட் டால் அது முழுவதும் குருதியினுள் ஏற்றுக்கொள்ளப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/95&oldid=866550" இலிருந்து மீள்விக்கப்பட்டது