பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்

நீர்ப்பாசனத் துறை மானியம்

உரை: 1

நாள்: 11.07.1957

ல்

கலைஞர் மு. கருணாநிதி : சட்ட மன்ற துணைத் தலைவர் அவர்களே, குறிப்பிட்ட வெட்டுப் பிரேரணை நீர்ப்பாசன வசதி சென்னை மாநிலத்தில் இன்னும் எந்த எந்த வகையில் நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது என்பதைப் பற்றிய குறிப்புகளை இங்கே தருவதற்கு ஆசைப்படுகிறேன். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் நீர்ப்பாசன வசதிகளால் பயன்பெறும் நிலப்பரப்பு இன்னும் எவ்வளவு அதிகமாகும் என்ற புள்ளி விவரங்களை நாம் ஒரு முறை காண்பது மிக மிக நலம் என்று கருதுகிறேன். வட நாட்டிலே இருக்கின்ற மாகாணங்களில் நீர்ப்பாசன திட்டங்களால் பயன் பெறுகின்ற நிலத்தினுடைய பரப்பும் மேலும் எவ்வளவு அதிகரிக்கிறது என்பதையும், நம்முடைய அ சென்னை மாநிலத்தில் இத் திட்டங்களால் மேலும் பயன்பெறக் கூடிய பரப்பையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்களால் பஞ்சாப் மாகாணத்தில் பதினேழு லக்ஷம் ஏகரா நிலப்பரப்பு மேலும் அதிகமாக பயன் பெறப்போகின்றது. ஒரிஸா மாகாணத்தில் பதினாறு லக்ஷம் ஏகரா நிலப் பரப்பு மேலும் அதிகமாக பயன் பெறப் போகின்றது.

ல்

உத்திரப் பிரதேசத்தில் 1,310,000 ஏகரா.

2-க.ச.உ.(மா.து.நி-பா.1)