பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது




மேற்கு வங்காளத்தில் 1,270,000 ஏகரா.

ராஜஸ்தானில் 1,160,000 ஏகரா.

பீகாரில் 1,140,000 ஏகரா.

பம்பாயில் 1,000,000 ஏகரா.

மத்திய பிரதேசத்தில் 400,000 ஏகரா. ஆந்திராவில் 290,000 ஏகரா.

பரிதாபத்துக்குரிய நம் சென்னை மாநிலத்தில் 140,000 ஏகராதான் அதிகப்படியாக இந்த நீர்ப்பாசன வசதிகளால் பயன்படப்போகிறது என்பது இந்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட புள்ளி விவரங்களிலிருந்து நமக்குத் தெரியவருகிறது. புள்ளி விவரத்தையொட்டி பேசவேண்டும் என்று கூறப்பட்ட காரணத்தால், வெறும் “வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது" என்பதை மாத்திரம் சொல்லாமல் புள்ளி விவரங்களையும் குறிப்புகளையும் நான் அமைச்சர் அவர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். மத்திய சர்க்கார் சென்னை மாநிலத்தில் ஆற்று ப நீர் மேட்டுப் பகுதிகளிலும் பயன்படவேண்டும் என்பதற்காக ஆற்று நீர் இரைப்புத் திட்டம் என்ற ஒரு திட்டம் 1951-52-ம் ஆண்டில் அமுலாக்கப்பட்டு, அதற்காக மத்திய சர்க்கார் 50 சத விகிதம் மான்யம் தருவதாக ஒப்புக்கொண்டார்கள். அப்படித் தரப்பட்ட மான்யத்தை 1953-ம் ஆண்டு நிறுத்திவிட்ட காரணத்தால் அந்த ஆற்று நீர் இரைப்புத் திட்டத்தை சென்னை மாநில சர்க்கார் நிறைவேற்றமுடியாமல் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு, இறுதியில் பரிபூரணமாக நிறுத்தப்பட்டுவிட்டது என்பதை மறக்க முடியாது. இந்த ஆற்று நீர் இரைப்புத் திட்டம் இல்லாததன் காரணமாக "பம்ப்செட்டுகள்" பொருத்தி, மேட்டுப்பகுதிகள் வளப்படுத்தப்படும் வசதி ஏற்படாமல் போகின்றது என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. சென்னை மாநிலத்தில் நீர்ப்பாசனத் திட்டங்கள் அதிகமாக இல்லை என்பதற்குச் சொல்லப்படும் காரணங்களில் மிகமிக முக்கியமான காரணம் "இங்கு பெரிய ஆறுகள் கிடையாது” என்பதுதான். ஒரு சில ஆறுகளினுடைய தண்ணீரை கடலில் கலக்காமல் நாங்கள் பார்த்துக்கொள்ளுகின்றோம் என்று