பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

19




அமைச்சர் பெருமக்கள் எடுத்துச் சொன்னார்கள். கடலில் விழுகின்ற காரணத்தால் மாத்திரம் ஆற்று நீர் வீணாகி விடவில்லை. வேறு சில காரணங்களாலும் வீணாகப் போகின்றது என்று சட்டநாத கரையாளர் எடுத்துக் கூறினார்கள். அது க் மாத்திரம் அல்ல. கடலில் கலக்கின்ற தண்ணீர் தடுக்கப்பட்டால் மட்டும் போதாது ! ஆற்று நீர் கழனிகளில் பயன்படாத நிலையில் மணலிலேயே சேர்ந்து வீணாகப் போகின்றது என்பதை மறந்து விடக்கூடாது. என்னுடைய குளித்தலைத் தொகுதியைப் பற்றி கவர்னர் பெருமான் உரையின் மீது எழுந்த விவாதத்தின்போது நான் அமைச்சர் அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். குளித்தலைத் தொகுதி மிக மிக வளமான தொகுதி என்று குளித்தலைத் தொகுதியின் தலைநகரில் இறங்கும் ஒருவர் சொல்லலாம். உண்மையில் குளித்தலைத் தொகுதியை குளித்தலை, மாயனூர், வெள்ளையணை என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒருவர் வரிசையாகப் பயணம் நடத்தினால் குளித்தலை தொகுதி வளமான தொகுதி, எழிலான தொகுதி என்று எண்ண ஆரம்பித்து அடிக்கரும்பை சுவைப்பது போல் சுவைத்து, மாயனூர் சென்றால் நடுக்கரும்புக்கு வந்து, பிறகு வெள்ளியணைக்கு வரும்போது நுனிக்கரும்பை சுவைப்பது போல் முடியும். வெள்ளியணையில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல், வறண்ட நிலங்களாக உள்ள பல இடங்களை அங்கே காண முடியும். குடகனாறு திட்டம் அங்கே தேவை, அத்தகைய குடகனாறு திட்டம் நிறைவேற்றப்படுமானால் 10,000 ஏகரா புஞ்சை நிலங்களை நஞ்சை நிலங்களாக மாற்ற முடியும் என்று 1951-ம் ஆண்டிலிருந்து பெரிய கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கிளர்ச்சியை ஏதோ பலாத்காரப் போராட்டம் என்று நான் குறிப்பிடுகிறேன் என்று யாரும் கருதக்கூடாது. அங்கேயிருக்கும் பொதுமக்கள் - அந்தக் குடகனாறுத் திட்டம் தேவை என்று கூறி, 1951-ம் வருஷம் பிப்ரவரி மாதம் 19ம் தேதியில் மராமத்து மந்திரியிடமும் 1952-ம் வருஷம் செப்டம்பர் மாதம் 2-ந் தேதியில் நிதி அமைச்சரிடமும், 1953-ம் வருஷம் ஜனவரி மாதம் 12-ந் தேதியில் ரெவின்யூ அமைச்சரிடமும், 1954-ம் வருஷம் ஜனவரி மாதம் 11-ந் தேதியில் முதல் அமைச்சரிடமும் அதற்கான மனுக்களைத் தந்து,