பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

குடகனாறுத் திட்டத்தைக் கவனிக்க வேண்டுமென்று எடுத்துச் சொல்லப்பட்டது.

து

ல்

பழனி மலையிலிருந்து உற்பத்தியாகிற குடகனாறு ஏறத்தாழ 86 மைல் நீளமுள்ள ஆறு-சுமார் 30 மைல் தூரம் திண்டுக்கல் தாலூகாவில் ஓடி, ஆயிரம் ஏக்கரா நிலத்திற்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்டு, அங்கிருந்து மிச்சமுள்ள 56 மைல் நீளம், அதனுடைய தண்ணீர் எல்லாம் வீணாகப் போய், அமராவதியில் கலக்கிறது என்ற நிலைமையில், வேடசெந்தூருக்கு அருகேயுள்ள கல்வார்பட்டி என்னும் இடத்தில் ஒரு நீர்த்தேக்கம் அமைத்து, அந்தத் தண்ணீர் அங்கே பயன்படுத்தப்பட, சுமார் 23 மைல் நீளமான ஒரு வாய்க்கால் வெட்டப்பட்டால், வெள்ளியணை, வீரவல்லி, ஜெகதாபி, உப்பிடமங்கலம் என்ற பல ஏரிகள் நிரம்பி, பத்தாயிரம் ஏக்கரா நிலம் அங்கே சாகுபடி ஆகும் என்றும், அதற்குப் பன்னிரண்டு லட்சம் ரூபாய் செலவாகும் என்று கரூர் PWD சூபர்வைசர் அதற்கு ஒரு திட்டமே தயாரித்துக் கொடுத்தார். அப்படித் தயாரிக்கப்பட்ட அந்தத் திட்டத்தைப் பெற்ற மக்கள், திருச்சி எக்ஸிக்யூடிவ் என்ஜினீயர் அலுவலகத்திற்கு கு 1953-ம் வருஷம் அக்டோபர் மாதம் 22-ந் தேதியில் மனு மூலம் தெரிவித்தும், இதுவரை கேட்பாரற்று அந்த மனு அங்கே தூங்கிக் கொண்டிருக்கிறது.

பன்னிரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்தால் பத்தாயிரம் ஏக்கரா நிலம் அங்கே பயன்படும், புஞ்சை, நஞ்சையாக மாறும் என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில், மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களுக்கு - சபாநாயகருடைய அனுமதியின் பேரில் ஒன்று தெரிவிக்க ஆசைப்படுகிறேன். ஆரணியாறுத் திட்டத்திற்கு 104.19 லட்சம் ரூபாய் செலவானாலும் பயன்படுகிற நிலங்கள் ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் ஏக்கராதான். இதனால் ஆரணியாறு திட்டம் தேவை இல்லை என்று நான் கூறவில்லை. ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் ஏக்கரா நிலங்களுக்குப் பயன்படுகிற ஆரணியாறு திட்டத்திற்கு 104.19 லட்சம் செலவாகும் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணகிரி நீர்த் தேக்கத் திட்டத்திற்கு 184.03 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், அதனால் பயன் பெறுவது 7,500 ஏக்கரா நிலம் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி 184 லட்சமும், 104 லட்சமும்