பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

23

உரை : 2

விவசாயத் துறை மானியம்

நாள் : 19.07.1957

கலைஞர் மு. கருணாநிதி : சட்ட மன்ற தலைவர் அவர்களே, குறிப்பிட்டுள்ள வெட்டுப் பிரேரணையை ஆதரித்து சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன். விவசாயத்தை நம்பியும் விவசாயத்தால் பெருமை பெற்றும் திகழ்கின்ற நமது நாட்டில் விவசாயத்திற்கு மிக மிக முக்கியமானது நல்ல விதைகள். அத்தகைய நல்ல விதைகளை வளர்த்துத் தருகிற பொறுப்பை மாநில அரசு ஏற்றிருக்கிறது என்று கனம் நிதி அமைச்சர் தந்த அறிக்கையிலும் நேற்றைய தினம் விரிவுரை ஆற்றிய விவசாய அமைச்சருடைய பேச்சிலும் காணப்படு ம் கின்றது. நல்ல விதைகளைத் தருவதற்காக 400 விதைப் பண்ணைகள் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நிறுவப்படும் என சென்னை அரசாங்கத்தினுடைய செய்தித்துறை வெளியீடான “உழவனுக்கு" என்ற நூலில் காணப்படுகிறது. அதே நேரத்தில் 400 விதைப் பண்ணைகளை நிச்சயமாக நிறுவுவார்கள் என்ற மகிழ்ச்சி பெற்றாலும் நிதி அமைச்சருடைய நிதி நிலை அறிக்கையிலும் விவசாய அமைச்சருடைய பேச்சிலும் பார்த்தால் 360 பண்ணைகள்தான் செய்தி தெரிய வருகிறது. 400 பண்ணைகள் நிறுவப்படும் என்ற செய்தியையும் 360 பண்ணைகள் நிறுவப்படும் என்ற செய்தியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் 40 பண்ணைகள் குறைந்து போனதாகத் தெரிய வருகிறது.

மாண்புமிகு திரு. மு. பக்தவச்சலம் : தென் கன்னடம், மலையாளம் முதலிய பிரதேசங்கள் சேர்ந்து இருந்த காலத்தில் ப்ளானிங் கமிஷனால் 400 பண்ணைகள் நிறுவப்படுவதாக